தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Side Effects Of Noodles : நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? செரிமான பிரச்னைகள் முதல் எத்தனை கேடுகளை கொண்டு வருது பாருங்க!

Side Effects of Noodles : நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? செரிமான பிரச்னைகள் முதல் எத்தனை கேடுகளை கொண்டு வருது பாருங்க!

Priyadarshini R HT Tamil

Jun 10, 2024, 02:35 PM IST

google News
Side Effects of Noodles : நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? செரிமான பிரச்னைகள் முதல் எத்தனை கேடுகளை உங்கள் உடலுக்கு ஏற்படுத்துகிறது என்று தெரிந்துககொள்ளுங்கள்.
Side Effects of Noodles : நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? செரிமான பிரச்னைகள் முதல் எத்தனை கேடுகளை உங்கள் உடலுக்கு ஏற்படுத்துகிறது என்று தெரிந்துககொள்ளுங்கள்.

Side Effects of Noodles : நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? செரிமான பிரச்னைகள் முதல் எத்தனை கேடுகளை உங்கள் உடலுக்கு ஏற்படுத்துகிறது என்று தெரிந்துககொள்ளுங்கள்.

நூடுல்ஸ் உட்கொள்வதால் உங்களுக்கு என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்று இதில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் அதிகம் நூடுல்ஸை உட்கொள்கிறோம்

நூடுல்ஸின் பயன்பாடு அதிகரித்துவிட்டதை நாம் கணக்கில்கொள்ளவேண்டும். நூடுல்ஸ் போன்ற இன்ஸ்டன்ட் உணவுகள், மனித உடலுக்கு நாள்பட்ட தீங்கை ஏற்படுத்துகின்றன. இவைகுறித்த ஆராய்ச்சிகளை நாம் அதிகரிக்க வேண்டும்.

சோடியம் அதிகம் உள்ளது

இன்ஸ்டன்ட் நூடுல்சில் சோடியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதய நோய் முதல் பக்கவாதம் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சோடியச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை, நாம் தினமும் உட்கொள்ளக்கூடாது. இதனால் உடல் நீர்ச்சத்தை இழப்பதுடன் வயிறு உப்புசமாகும்.

ஊட்டச்சத்துக்கள் குறைந்தது

நூடுல்சில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளது. குறிப்பாக இன்ஸ்டன்ட்டாக செய்யப்பட்டு, நாம் விரும்பி சாப்பிடும் நூடுசில், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவான அளவே உள்ளது. இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், மினரல்கள் என ஒன்றும் இல்லை. இந்த நூடுல்ஸை நாம் சாப்பிடும்போது அது ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.

ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம்

நூடுல்ஸ்களில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்திருக்கும். குறிப்பாக இன்ஸ்டன்ட் நூடுல், பாமாயிலில் பொரித்து எடுக்கப்படும் அல்லது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்ததாக இருக்கும். இதை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால், இதய நோயை ஏற்படுத்தும். மேலும் அதிக கொழுப்பு அளவையும் உண்டாக்கி, உங்கள் உடல் எடையை உயர்த்தும்.

ப்ரிசர்வேட்டிவ்கள் நிறைந்தது

இன்ஸ்டன்ட் நூடுஸ்களில் அதிகளவில் ப்ரசர்வேட்டிவ்கள் இருக்கும். இதில் உள்ள அடிமைப்படுத்தும் செயற்கை உட்பொருட்கள், இது கெடாமல் இருக்கும் நாளை அதிகரிக்கும். இந்த வேதிப்பொருட்களை அடிக்கடி உட்கொள்வது உங்களின் ஆரோக்கியத்தை அதிகளவில் பாதிக்கிறது. இது நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தும்.

வளர்சிதை நோய் ஏற்படும் ஆபத்து

இன்ஸ்ட்ன்ட் நூடுல்ஸை நீங்கள் சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டால், அது உங்களுக்கு வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடலில் உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை அளவு, அதிக கொழுப்புகள் மற்றும் அதிகளவிலான கெட்ட கொழுப்பு சேர்வதை அதிகரிக்கிறது.

உயர் கிளைசமிக் இண்டக்ஸ்

நூடுல்ஸ் உயர் கிளைசமிக் இண்டக்ஸில் உள்ள உணவாகும். இதனால் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால் உங்கள் ஆற்றல் சிதைக்கப்பட்டு, அடிக்கடி பசி ஏற்படுகிறது. மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

செரிமான கோளாறுகள்

நூடுல்சில் உள்ள நார்ச்சத்துக்கள் குறைபாடு, உங்களுக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் மலச்சிக்கல், குடல் இயக்கத்தில் தடை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. நார்ச்சத்துக்கள்தான் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கும், குடல் இயக்கம் சீராக நடைபெறவும் உதவும்.

எடை அதிகரிப்பு

நூடுல்ஸில் அதிக கலோரிகள் உள்ளது. உடல் எடை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகளவில் நீங்கள் உட்கொள்ளும்போது, உங்கள் உடலுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துகிறது. இதில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹட்ரேட்கள் உள்ளது. இதனால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகளவில் சேர்கிறது.

மோனோசோடியம் குளுட்டாமேட்

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களில் மோனோசோடியம் குளுட்டாமேட்கள் உள்ளன. இது சுவையை அதிகரிக்கும், சிலருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எம்எஸ்ஜியின் அறிகுறிகள், தலைவலி, வியர்வை மற்றும் நெஞ்சு வலி ஆகியவற்றை ஏற்படுத்தும்.

திருப்தி குறைவாக இருக்கும்

நூடுல்ஸில், புரதச்சத்துக்கள் குறைவாக உள்ளது. நார்ச்சத்துக்களும் இதில் இல்லை. இதனால் வயிறு நிறைந்த உணர்வையும், சாப்பிட்ட திருப்தியையும் ஏற்படுத்தாது. இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவீர்கள், நீங்கள் கலோரிகள் உட்கொள்ளும் அளவும் அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலின் எடை அதிகரிப்பதுடன், உங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழக்கத்தை தராது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி