தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Jack Fruit : சரும நோய்கள், அல்சர், மலச்சிக்கல் என எண்ணற்ற பிரச்னைகளுக்கு தீர்வுதரும் பலாவின் பற்பல நன்மைகள்!

Benefits of Jack Fruit : சரும நோய்கள், அல்சர், மலச்சிக்கல் என எண்ணற்ற பிரச்னைகளுக்கு தீர்வுதரும் பலாவின் பற்பல நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Jun 07, 2024 10:51 AM IST

Benefits of Jack Fruit : சரும நோய்கள், அல்சர், மலச்சிக்கல் என எண்ணற்ற பிரச்னைகளுக்கு தீர்வுதரும் பலாவின் பற்பல நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Jack Fruit : சரும நோய்கள், அல்சர், மலச்சிக்கல் என எண்ணற்ற பிரச்னைகளுக்கு தீர்வுதரும் பலாவின் பற்பல நன்மைகள்!
Benefits of Jack Fruit : சரும நோய்கள், அல்சர், மலச்சிக்கல் என எண்ணற்ற பிரச்னைகளுக்கு தீர்வுதரும் பலாவின் பற்பல நன்மைகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

22.6 மில்லிகிராம் வைட்டமின் சி, 0.5 மில்லிகிராம் வைட்டமின் பி6, 1.5 மில்லிகிராம் நியாசின், ரிபோஃபிளேவின் 0.1 மில்லிகிராம், கால்சியம் 39.6 மில்லிகிராம், மெக்னீசியம் 47.8 மில்லிகிராம், பொட்டாசியம் 739 மில்லிகிராம், பாஸ்பரஸ் 34.6 மில்லிகிராம் உள்ளது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் என்பவை, செல்களை சேதப்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்கள் என்ற அச்சுறுத்தும் மாலிக்கியூல்களிடம் இருந்து உங்கள் உடலில் ஏற்படும் செல்களின் சேதத்தைக் கட்டுப்படுத்தும்.

பலாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்ட்கள், பலாப்பழத்துக்கு அதன் மஞ்சள் நிறத்தை தருகின்றன. இது வீக்கம், இதய நோய்கள், புற்றுநோய், வயோதிகம் தொடர் கண் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஃப்ளேவனாய்ட்கள், பற்றுநோயை எதிர்த்து, இதயத்தை காத்து, வயோதிகத்தில் மூளையை காக்கிறது.

லிக்னன்கள், இதய நோய் ஆபத்தை குறைத்து, மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுத்து, எலும்புப்புரையைப் போக்குகிறது. மெனோபாஸை தடுக்கிறது.

பலாப்பழம் வீக்கத்தை குறைக்கிறது

அதிகப்படியான வீக்கம், உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. அவை நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வீக்கத்தை குறைக்கிறது.

மலச்சிக்கலைப் போக்குகிறது

பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுக்கிறது.

அல்சரை குணப்படுத்துகிறது

பலாப்பழத்தில் உள்ள இயற்கை குணங்கள், உங்கள் வயிற்றில் ஏற்படும் புண்களை சரிசெய்கிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

மற்ற உணவுகளைவிட உங்கள் உடல் பலாப்பழத்தை மெதுவாக செரிக்கச் செய்து, உறிஞ்சுகிறது. இதனால் உங்கள் ரத்தச்சர்க்கரை, மற்ற பழங்களை சாப்பிடுவதைவிட விரைவாக உயராது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது

பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியம் மற்றும் பக்கவாதத்தை குறைக்க உதவுகிறது. பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

சரும பிரச்னைகளை சரிசெய்கிறது

பலாப்பழத்தில் அதிகம் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் சருமம், வெப்பத்தால் சேதமடைவதை தடுக்கிறது. இது வயோதிகத்தை எதிர்த்து போராடுகிறது. உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைக்கிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது

பலாப்பழத்தில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்கள், இயற்கை உட்பொருட்கள் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மைகொண்டது. இது உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.

எலும்புப்புரை நோயைத் தடுக்கிறது.

பலாப்பழத்தில் உள்ள மெக்னீசியச் சத்துக்கள், உங்கள் உடல் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தி, எலும்புப்புரை நோயை தடுக்கிறது.

தொற்றுக்களை குணப்படுத்துகிறது

பலாப்பழம், பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள இயற்கை உட்பொருட்கள் மற்றும் பூஞ்ஜை, பாக்டீரியாக்களுக்கு எதிரானவை, தொற்றுக்களை தடுக்கிறது.

பக்கவிளைவுகள்

பலாப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், இது பல்வேறு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அலர்ஜியை ஏற்படுக்கிறது. அரிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. 

இதில் உள்ள அதிக பொட்டாசியம், சிறுநீரக கோளாறுகள் அல்லது பாதிப்பு உள்ளவர்களுக்கு தீங்குவிளைவிக்கும். எனவே அவர்கள் தவிர்த்தல் நலம். இல்லாவிட்டால் பக்கவாதம் அல்லது மாரடைப்பைக் கூட ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

வயிறு உபாதைகள், அதிக பலாப்பழத்தை உட்கொள்ளும்போது சிலருக்கு வயிறு கோளாறுகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு, வலி ஆகியவை ஏற்படும். பலாக்கொட்டைகளில் உள்ள வேதிப்பொருட்கள் உங்கள் செரிமானத்தை தடுக்கிறது. எனவே பலாக்கொட்டையை சமைத்து மட்டுமே உண்ணவேண்டும்.

எப்படி சாப்பிடவேண்டும்?

நன்றாக பழுத்த பலாப்பழங்களை மட்டுமே சாப்பிடவேண்டும். பழுத்த பலாவை வெட்டி உப்பு தண்ணீரில், வேகவைத்து அவை மிருதுவானவுடன் சாப்பிடவேண்டும். கொட்டைகளை வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம். 

பெரும்பாலும் சாம்பாரில் சேர்த்து சாப்பிடுவோம். மாங்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், பலாக்கொட்டை சாம்பார் அத்தனை சுவையானது. பலாப்பழத்தை சமைத்தும் சாப்பிடலாம். அதற்கும் பல்வேறு வழிகள் உள்ளது. அவ்வாறும் சாப்பிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்