குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகையாக நூடுல்ஸ் இருந்து வருகிறது

By Muthu Vinayagam Kosalairaman
Jun 06, 2024

Hindustan Times
Tamil

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மிகவும் பிரபலமானதாக இருந்தாலும் உடலுக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியமானது கிடையாது என கூறப்படுகிறது. அதிகப்படியான சோடியம், ரசாயண சேர்மானம், உணவு பாதுகாப்பு பொருள்கள் இருப்பதால் நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு லிஸ்டில் சேராது

குறுகிய நேரத்தில் சமைத்து சாப்பிடலாம் என்பதால் பலருக்கும் உணவு தேர்வாக நூடுல்ஸ் உள்ளது. இதனால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை பார்க்கலாம்

ஊட்டச்சத்துகள் மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஆரோக்கியமற்ற கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட கார்ப்போஹைட்ரேட்கள் நிறைந்திருப்பதால் உடலில் கலோரிகளை மட்டும் அதிகரிக்கிறது

அதிகப்படியான சோடியம் நிறைந்துள்ளது. அளவுக்கு அதிகமான உப்பு உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன் வேறு சில உடல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது

மைதா மாவில் தயார் செய்யப்படுவதால் குறைவான ஊட்டச்சத்துகளும், டயட்ரி நார்ச்சத்துகளும் உள்ளன. இதை அதிக அளவில் உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்

பொதுவாகவே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாமாயில் அல்லது இதர ஆரோக்கியமற்ற எண்ணெய்களில் தயார் செய்யப்படுவதால் அதிகப்படியான டிரான்ஸ் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை உற்பத்தி செய்கிறது. இதனால் கொலஸ்டரால் அளவும் அதிகரிக்கிறது

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களில் அதிகப்படியான உணவு பாதுகாப்பு பொருள்கள் சேர்க்கப்படுவதால் கல்லீரல் வீக்கம், லிம்போமா போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

நவம்பர் 03-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்