Sea Food : கடல் உணவுப்பிரியரா நீங்கள்? அச்சச்சோ இந்த ஆராய்ச்சி தரும் அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா?
Apr 16, 2024, 03:27 PM IST
Sea Food : இதனால் அன்றாடம் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இயற்கையில் இருந்து கிடைக்கும் உணவுகளான கடல் உணவுகளிலும் இப்போது நச்சுக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் மீன்கள், இறால்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் "என்றென்றும் நிலைத்திருக்கும் அபாய வேதிப்பொருட்கள்"உள்ளது என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
பொதுவாகவே இன்றைய உணவுப்பழக்கங்கள் அதிகளவில் மாறிவிட்டது. குழந்தைகள் குப்பை உணவுகள் எனப்படும் ஜங்க் ஃபுட்ஸ் உள்ளிட்டவற்றைதான் அதிகம் விரும்பி உண்கிறார்கள். இவையெல்லாம் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவையாக உள்ளது.
இதனால் அன்றாடம் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இயற்கையில் இருந்து கிடைக்கும் உணவுகளான கடல் உணவுகளிலும் இப்போது நச்சுக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் உணவான மீன்கள் (Tuna-சூரை மீன்), இறால்கள், சிங்க இறால்கள் (Lobsters) போன்றவற்றை உண்ணும்போது, உடம்பிற்கு நல்ல பலனை அளிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கிடைப்பது உண்மையென்றாலும், அவற்றை அதிகம் உட்கொண்டால், மேற்சொன்ன கடல் உணவுகளில், சுகாதாரத்திற்கு பெரும் கேடை ஏற்படுத்தும் "என்றென்றும் நிலைத்திருக்கும் அபாயகரமான வேதிப்பொருட்கள் (Forever Chemicals) அதிகம் உள்ளதாக இங்கிலாந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவை Per and Poly-fluoroalkyl substances (PFAS) எனும் பேராபத்தை விளைவிக்கும் தொழிற் நிறுவன கழிவுகளிலிருந்து வெளியாகும் வேதிப்பொருட்களாகும்.
Dartmouth College-UK கல்லூரி நிபுணர்கள், கடல் உணவுகளில் (மீன்கள் மற்றும் இறால்) பாதரசம் மற்றும் பிற வேதிப்பொருட்களின்பாதுகாப்பான அளவு வரையறுக்கப்பட்டிருந்தாலும், PFAS வேதிப்பொருட்களின் பாதுகாப்பான அளவு வரையறுக்கப்படவில்லை எனும் அபாயத்தை தோலுரித்து காட்டியுள்ளனர்.
இந்த ஆய்வில் நிபுணர்கள், 26 வகையான PFAS வேதிப்பொருட்களை, Cod, Haddock, Lobster (சிங்க இறால்), Salmon (சால்மன்), Scallop, ஸ்கேலாப்) Tuna (சூரை மீன்), Shrimp (இறால்) போன்ற கடல் உயிரினங்களில் அளந்து பார்க்கையில், இறால்கள் மற்றும் சிங்க இறால்களில் PFASன் அளவு மிக அதிகமாக உள்ளதென்றும், பிற உயிரினங்களில் PFAS (என்றென்றும் நிலைத்திருக்கும் அபாயகரமான வேதிப்பொருட்கள்-Forever Chemicals) இறால்கள் மற்றும் சிங்கஇறால்களைக் காட்டிலும் சற்று குறைவாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.
என்றென்றும் நிலைத்திருக்கும் அபாயகரமான வேதிப்பொருட்கள் PFAS உடம்பினுள் அதிகம் சென்றால், பின்வரும் நோய்களை அது எந்த வயதினருக்கும் ஏற்படுத்தும்.
புற்றுநோய்
கருவில் வளரும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு பிறவிக்கோளாறுகள் (Foetal Abnormalities) உண்டாவது
அதிக கொழுப்பு உடம்பில் சேர்வது (High cholesterol) போன்ற சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் இந்தியாவில், PFAS கடல் உணவுகளில் இருப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
எனவே, மீன்கள் மற்றும் இறால்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வருமுன் அவற்றில் PFASன் அளவு அதிகம் உள்ளதா? என்பதை உறுதிபடுத்தும் ஆய்வுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
PFAS வேதிப்பொருட்களை வெளியிடும் தொழிற்நிறுவனங்களை கண்காணித்து அவை கட்டுக்குள் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தமிழக அரசு அக்கறை காட்டுமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்