Banana Halwa: உங்களுக்கு வாழைப்பழம் பிடிக்குமென்றால், இந்த வாழைப்பழ அல்வா செய்முறையை முயற்சித்து பாருங்களேன்..!
Jul 01, 2024, 04:19 PM IST
Banana Halwa: உங்களுக்கு வாழைப்பழம் பிடிக்குமென்றால், இந்த வாழைப்பழ அல்வா செய்முறையை முயற்சித்து பாருங்களேன்
Banana Halwa: தெற்காசியாவில் அல்வா தயாரிப்பது பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்ட, ஒரு கலாசார நுகர்வாக பல ஆண்டுகள் இருக்கிறது.
வாழைப்பழ அல்வா தெரியுமா?
உலகெங்கிலும் உள்ள இனிப்பு பிரியர்களுக்கு, வாழைப்பழ அல்வா ஒரு இனிப்பு விருந்தாகும். இது பலரின் இதயங்களையும் பலரின் நாவின் சுவைமொட்டுகளையும் அரும்பச் செய்கிறது. வாழைப்பழ அல்வாவின் அழகு அதன் எளிமையில் சுவையில் உள்ளது. ஏனெனில், இது பிரியமான இனிப்புகளின் பட்டியலில், பலருக்கு முதல் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
மேலும் உங்களிடம் சில பழுத்த வாழைப்பழங்கள் கிடந்தால், இந்த ஒரு எளிதான வாழைப்பழ அல்வா செய்முறையை முயற்சிப்பதன் மூலம் ஒரு மகிழ்ச்சிகரமான இனிப்பைச் செய்து பார்த்த திருப்தி கிடைக்கும்.
உங்கள் சுவை மொட்டுகளைக் கவர்ந்திழுக்க வாழைப்பழ அல்வாவை சூடாக தயாரிப்பது, அதை உங்கள் விருந்தினர்களுக்கு பரிமாறுவது உங்கள் உறவினைப் பலப்படுத்த உதவுகிறது. வாழைப்பழ அல்வாவை செய்ய கீழே உள்ள செய்முறையைப் பாருங்கள்.
தயாரிப்பு நேரம்: 4-5 மணி நேரம்
சமைக்கும் நேரம்: 20-25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
· 4-6 டேபிள் ஸ்பூன் டால்டா வனஸ்பதி + தடவுவதற்கு சிறிது வனஸ்பதி
· 3 கப் வாழைப்பழ கூழ்
· 1 கப் துருவிய வெல்லம்
· 3/4 கப் துருவிய பனை வெல்லம்
· 1/2 தேக்கரண்டி பச்சை ஏலக்காய்த் தூள்
· 5-6 வறுத்த முந்திரி பருப்பு + அலங்கரிக்க சிறிதளவு
வாழைப்பழ அல்வா செய்முறை:
1. ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை சூடாக்கவும். 2-3 டேபிள் ஸ்பூன் டால்டா வனஸ்பதி சேர்த்து உருக விடவும்.
2. வாழைப்பழ கூழ் சேர்த்து மிதமான சூட்டில் கலவை வாணலியில் ஒட்டாதவாறு, பழுப்பு நிறமாக மாறும் வரை சமைக்கவும்.
3. மற்றொரு கடாயை சூடாக்கவும் வெல்லம், பனை வெல்லம், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி வெல்லம் கரையும் வரை சமைக்கவும்.
4. வாழைப்பழத்துடன் பச்சை ஏலக்காய்த்தூள், மீதமுள்ள டால்டா வனஸ்பதி சேர்த்து நன்றாக கலக்கவும். அதிக சூட்டில் 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
5. பின் மேற்கூறியவற்றுடன் வெல்லப் பாகு சேர்த்து நன்றாக கலக்கவும் கலவை கெட்டியாகி, வாணலியில் ஒட்டும் வகையில் நடுத்தர வெப்பத்தில் சமைக்கவும்.
6. அதனுடன் முந்திரி பருப்பைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
7. கலவையை ஒரு தடவப்பட்ட கண்ணாடி பேக்கிங் டிஷில் மாற்றி, மேலே இன்னும் சிறிது முந்திரி பருப்புகளை தூவி 3-4 மணி நேரம் ஒதுக்கி வைக்கவும். சதுரங்களாக வெட்டி பரிமாறவும்.
வெல்லத்தில் இருக்கும் சத்துக்கள்:
பொட்டாசியத்தின் களஞ்சியமான வெல்லம் எலக்ட்ரோலைட் சமநிலையை உடலில் பராமரிக்கவும் உதவுகிறது. இது கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளது.
ஏலக்காய் தரும் நன்மைகள்:
ஏலக்காய் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, அஜீரணம், டிஸ்யூரியா மற்றும் பல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
பசியின்மை, வாந்தி உணர்வு, இரைப்பை அழற்சி, தொண்டை எரிச்சல், துர்நாற்றம் (ஹலிடோசிஸ்), அடிவயிற்றில் எரியும் உணர்வு, வாய்வு, அஜீரணம், விக்கல், அதிகப்படியான தாகம், வெர்டிகோ போன்ற பல உடல்நலப் பிரச்னைகளுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
டாபிக்ஸ்