தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Moong Dal Halwa Lets Eat It In One Bite Lentil Alva Asia Can Do It Now Is There So Much Health

Moong Dal Halwa : தெகிட்ட தெகிட்ட சாப்பிடலாம்! பாசிபருப்பு அல்வா! ஈசியா செய்யலாம் இப்டி! இத்தனை ஆரோக்கியமும் உள்ளதா?

Priyadarshini R HT Tamil
Mar 10, 2024 11:59 AM IST

Moong Dal Halwa : இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Moong Dal Halwa : தெகிட்ட தெகிட்ட சாப்பிடலாம்! பாசிபருப்பு அல்வா! ஈசியா செய்யலாம் இப்டி! இத்தனை ஆரோக்கியமும் உள்ளதா?
Moong Dal Halwa : தெகிட்ட தெகிட்ட சாப்பிடலாம்! பாசிபருப்பு அல்வா! ஈசியா செய்யலாம் இப்டி! இத்தனை ஆரோக்கியமும் உள்ளதா?

ட்ரெண்டிங் செய்திகள்

நெய் – 4 டேபிள் ஸ்பூன்

ரவை – கால் கப்

பாலில் கலந்த குங்குமப்பூ – கால் கப்

சர்க்கரை – 2 கப்

ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை

பால் – ஒரு கப்

பாதாம் – 10 துருவியது

பிஸ்தா – 10 துருவியது

முந்திரி – 10 துருவியது

செய்முறை

ஊறவைத்த பாசிப்பருப்பை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, அதில் ரவை சேர்த்து வறுக்க வேண்டும். அரைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் காய்ச்சிய பாலை அதில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். நெய், குங்குமப்பூ பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கலந்துவிடவேண்டும்.

சிறிது நேரம் மூடிவைத்து இறக்கினால் சுவையான பாசிபருப்பு அல்வா தயார். தெகிட்ட தெகிட்ட சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பாசிபருப்பின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள்

100 கிராம் பாசிப்பருப்பில் 347 கலோரிகள் உள்ளது. சேச்சுரேடட் கொழுப்பு 0.3 கிராம், மொத்த கொழுப்பு 1.2 கிராம், சர்க்கரை 7 கிராம், சோடியம் 15 மில்லி கிராம், நார்ச்சத்துக்கள் 16 கிராம், மொத்த கார்போஹைட்ரேட் 63 கிராம், பொட்டாசியம் 1,246 மில்லி கிராம் உள்ளது.

மற்ற பருப்புகளைவிடவும் பாசிப்பருப்பில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே எடை குறைக்க விரும்புபவர்கள் இதை பயன்படுத்தலாம். மற்ற பருப்புக்களைவிட இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது.

எளிதில் ஜீரணமாகக்கூடியது – பாசிபருப்பு எளில் செரிமானம் ஆகக்கூடியது. செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது. வயிறு கோளாறுகள் உள்ளவர்களுக்கும் ஏற்றது. இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள் செரிமானத்துக்கு உதவி, வழக்கமான குடல் இயக்கத்துக்கு பயனளிகிறது.

எடைக்குறைப்பு நண்பன் – இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக புரதச்சத்துக்கள், எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் சிறந்த தேர்வாகும். இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் அதிகளவில் உட்கொள்வதை தடுக்கும்.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது – பாசிபருப்பில், வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளது. அது சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சருமத்தில் உள்ள செல்களை மீண்டும் உருவாக்கவும், கொலஜென் உற்பத்திக்கும் உதவுகிறது. இதில் உள்ள சிங்க் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் சரும ஆரோக்கியத்துக்கும், முன்னரே தோன்றும் வயோதிகத்தையும் தடுக்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிக்கடி பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் சாம்பார், கடப்பா, சூப், வடை என பல்வேறு உணவுகள் செய்யலாம். எனவே இவற்றையெல்லாம் செய்து, சாப்பிட்டு பல்வேறு நன்மைகளையும் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்