தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Badam Pisin Halwa : பாதாம் பிசின் அல்வா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்!

Badam Pisin Halwa : பாதாம் பிசின் அல்வா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Apr 13, 2024 01:57 PM IST

Badam Pisin Halwa : குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்தை கொடுக்கிறது. மேலும் எலும்பு, மூட்டுகள், தசைகளை குளிரில் இருந்து காக்கிறது. உடலை குளிர்விக்கும் பானங்களில் கலந்து இது பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.

Badam Pisin Halwa : பாதாம் பிசின் அல்வா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்!
Badam Pisin Halwa : பாதாம் பிசின் அல்வா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

கோதுமை மாவு – ஒரு கப்

சர்க்கரை – முக்கால் கப்

நெய் – அரை கப்

டெசிகேடட் தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்

உலர்ந்த கிராட்சை – அரை கப்

செய்முறை

கடாயை சூடாக்கி நெய்யை சேர்த்து உருகியதும், அதில் பாதாம் பிசினை சேர்த்து வெடித்து, உப்பும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தனியா ஒரு தட்டில் வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பாதாம் பிசினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தும் முழுவதும் வறுபடவேண்டும்.

எஞ்சிய நெய்யில் கோதுமை மாவை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பச்சை வாசம் போகும் அளவுக்கு வறுத்ததால் நல்லது.

வறுத்த பாதாம் பிசினை உரலில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.

பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக வறுத்த கோதுமை மாவில் கொதிக்க வைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்த்து கட்டியில்லாமல் கிளறவேண்டும். அதில் வறுத்து, பொடித்த பாதாம் பிசின், டெசிகேடட் கோக்கனட்டையும் சேர்க்க வேண்டும்.

பொடியாக நறுக்கிய பாதாம், சர்க்கரை, உலர்ந்த திராட்சை என அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். ஏலக்காய்ப் பொடி தூவி இறக்க வேண்டும். 

கொஞ்சம் நெய் சேர்த்து கிளறி, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் இறுதியாக பொடித்த பாதாம் தூவி பரிமாறவேண்டும். சுவையான பாதாம் பிசின் அல்வா சாப்பிட தயார்.

இந்த அல்வாவை வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பாதாம் பிசினின் நன்மைகள்

பாதாம் மரத்தில் இருந்து வடியும் கம் அல்லது கோந்து அல்லது பிசின் போன்றது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது.

பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது.

ஜெல்லிபோல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். பார்க்க கற்கண்டுபோல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது.

பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது.

உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது

பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இதில் உள்ள குளிர்விக்கும் திறன், உடலின் சூட்டை குறைக்கிறது.

உடல் எடை அதிகரிக்க உதவுகிறது

பாதாம் பிசின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இதில் 90 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இதனால் அது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதை பாலில் சேர்த்து பருக ஒல்லியானவர்கள், உடல் எடையை அதிகரிக்கலாம்.

கொழுப்பை குறைக்கிறது

பாதாம் பிசின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவையும் முறைப்படுத்துகிறது. பாதாம் பிசினை உணவில் வழக்கமாக எடுத்துக்கொண்டால், கொழுப்பை குறைப்பதுடன், உடலில் ரத்தத்தின் அளவையும் பராமரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதனால் பல இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

பாதாம் பிசினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதச்சத்துக்களும், மினரல்களும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரிக்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பை பலப்படுத்துகிறது.

வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது

சருமத்தை ஃப்ரி ரேடிக்கல்கள்களிடம் இருந்து காப்பாற்றுகிறது. இந்த ஃப்ரி ரேடிக்கல்களே இளம் வயதிலே வயோதிக தோற்றம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதில் உள்ள புரதம் மற்றும் மினரல்கள் இரண்டும், சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக உள்ளன.

தசைகளை வலுப்படுத்துகிறது

பாதாம் பிசின், உடல் வலி மற்றும் முதுகு வலிகளை குணப்படுத்துகிறது. இதனால் தசைகள் வலுவடைகிறது. இது உடலில் ஆரோக்கியமான தசைகள் உருவாக வழிவகுக்கிறது.

பருவகால பிரச்னைகளை போக்குகிறது

இருமல், சளி மற்றும் சளி அடைத்துக்கொள்வதை குணப்படுத்துகிறது. இது மேலும் பல குளிர்கால பிரச்னைகளையும் சரிசெய்கிறது. கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை முறைப்படுத்துகிறது.

கருவுறுதலுக்கு உதவுகிறது

கருவுறுதலுக்கு முன் உடலை வலுப்படுத்த பாதாம் பிசின் உதவுகிறது. பாதாம் பிசினில் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த உதவுகிறது.

கர்ப்ப கால பயன்கள்

கர்ப்ப காலத்தில் எலும்பை உறுதிப்படுத்தி, உடலுக்கு வலு கொடுக்கிறது. கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது பிரசவித்த பின்னர் மாதவிடாய் சுழற்சி முறையாவதற்கு உதவுகிறது.

சருமத்தில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்த உதவுகிறது

இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்துகிறது. இது பல்வேற சரும நிலைகளுக்கு உதவுகிறது. இது சரும அழற்சி, வீக்கம், ரேஷ்கள், முகப்பருக்கள், தொற்றுகள் மற்றும் பல்வேறு பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

இதனால் கோடைக்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. வெயிலால் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த உதவுகிறது.

உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது

பாதாம் பிசின் உடல் எடை அதிகரிப்பில் மட்டுமல்ல உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதால் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களிலும் பயன்படுத்தலாம். கோடை காலங்களில் உடல் வெப்பநிலை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.

குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்தை கொடுக்கிறது. மேலும் எலும்பு, மூட்டுகள், தசைகளை குளிரில் இருந்து காக்கிறது. உடலை குளிர்விக்கும் பானங்களில் கலந்து இது பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.

இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒருமாதம் வரை இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இதை அதிகளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் எடுத்தால் மூச்சுத்திணறல், நரம்பு கோளாறுகளை ஏற்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் பரிந்துரையுடன் இதனை உட்கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்