தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பிங்க் வண்ண கேசரி; ரோஸ்மில்க் ஃப்ளேவரில் செய்யலாம்; பட்டு ரோஜா நிறத்தில் பார்ப்பவர் கண்களைக் கவரும்!

பிங்க் வண்ண கேசரி; ரோஸ்மில்க் ஃப்ளேவரில் செய்யலாம்; பட்டு ரோஜா நிறத்தில் பார்ப்பவர் கண்களைக் கவரும்!

Priyadarshini R HT Tamil

Dec 06, 2024, 03:48 PM IST

google News
ரோஸ்மில்க் கேசரி செய்ய கற்றுக்கொள்ளலாமா?
ரோஸ்மில்க் கேசரி செய்ய கற்றுக்கொள்ளலாமா?

ரோஸ்மில்க் கேசரி செய்ய கற்றுக்கொள்ளலாமா?

பிங்க் வண்ணத்தில், பட்டு ரோஜா நிறத்தில் பார்ப்பவர் கண்களை சுண்டி இழுக்கும் கேசரியை செய்வது எப்படி என்று பாருங்கள். இது பார்ப்பவரின் கண்களை கவர்ந்து இழுக்கும். இந்தக் கேசரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாக கேசரி என்பது எளிமையாக செய்யக்கூடிய ஸ்னாக்ஸ். வீட்டிற்து திடீர் விருந்தாளிகள் வந்துவிட்டால், அவர்களுக்கு சட்டுன்னு கேசரிதான் செய்து பரிமாறுவார்கள். ஏனெனில் இதை செய்வது எளிது. இதற்கு ரவை, சர்க்கரை, நெய், முந்திரி என நம் வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமே போதும். இது மிகுந்த சுவையாகவும் இருக்கும். விருந்துகளில் பரிமாறப்படும் இனிப்புகளில் முக்கிய இடம் பிடிப்பது இந்த கேசரி. இதற்கு வாழைக்காய் பஜ்ஜி மற்றும் சட்னி இருந்தால் போதும். சூப்பரான மாலை நேர சிற்றுண்டி தயார். அந்த காலத்தில் பெண் பார்க்கச் செல்பவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகளில் முதல் இடம் பிடித்துள்ளது இந்த ரவை கேசரி மற்றும் வாழைக்காய் பஜ்ஜி. கேசரியில் நெய் கொஞ்சம் கூடுதலாக சேர்த்தால் சுவையும் அள்ளும். சாப்பிட சாப்பிட மேலும் அதிகம் கேட்கத்தூண்டும்.

ரோஸ் மில்க் கேசரியை ரோஸ் மில்க் எசன்ஸ் கலந்து செய்துகொள்ளவேண்டும். ரோஸ் எசன்ஸ் அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். இந்த ஒரு மாற்றம் மட்டும் செய்தால் போதும் ரோஸ் கேசரி கிடைத்துவிடும். மற்றபடி வழக்கமான கேசரி செய்யும் முறைதான் இதற்கும். இந்த ரோஸ் மில்க் கேசரி குழந்தைகளை கவர்ந்து இழுக்கும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும். இந்த ரோஸ் மில்க் கேசரியை ஒருமுறை ருசித்தால் கட்டாயம் அடிக்கடி சாப்பிடவேண்டும் என்று நினைப்பீர்கள்.

ரோஸ்மில்க் கேசரி செய்ய தேவையான பொருட்கள்

பால் – 2 கப்

(பால் இல்லாமல் தண்ணீரிலும் செய்துகொள்ளலாம்)

ரவை – அரை கப்

நெய் – ஒரு கப்

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

திராட்சை – ஒரு கைப்பிடியளவு

ரோஸ் மில்க் எசன்ஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்

காய்ச்சிய ரீஃபைண்ட் ஆயில் – ஒரு ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை

சர்க்கரை – ஒரு கப்

தர்ப்பூசணி விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

கடாயில் ஒரு கப் நெய் சேர்த்து, அதில் முந்திரி மற்றும் திராட்சைகளை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு, அதே கடாயில் ரவையை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். ரவை நன்றாக வறுபட்டவுடன், இரண்டு கப் பாலை காய்ச்சி அதில் சேர்க்கவேண்டும். பால் இல்லாவிட்டால் தண்ணீரை காய்ச்சி சேர்க்கவேண்டும்.

ரவையுடன் நன்றாக கட்டிப்படாமல் கிளறவேண்டும். கையை எடுக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கட்டிப்படாது. அடுத்து ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். தண்ணீர் சுண்டி ரவை வெந்து வரும் பதத்தில் சர்க்கரையை சேர்த்து கிளறவேண்டும்.

சர்க்கரை கரைந்து நன்றாக சுருண்டு வரும். அப்போது ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ரீஃபைண்ட் ஆயில் சேர்த்து கலந்துவிடவேண்டும். இந்த ஆயில் சேர்க்கும்போது கெட்டியாகாமல், களிபோல் மாறாமல் கேசரி இருக்கும். அதற்குத்தான் இந்த எண்ணெயை சேர்க்கிறோம்.

அடுத்து ஏலக்காய், ஏற்கனவே வறுத்து வைத்து முந்திரி, திராட்சை மற்றும் தர்ப்பூசணி விதைகளைத் தூவி கலந்து இறக்கவேண்டும். சூப்பர் சுவையான ரோஸ் மில்க் கேசரி தயார். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு இதை செய்து நீட்டுங்கள் குஷியாகிவிடுவார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி