தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ இந்த ஜோக்ஸ படிச்சுட்டு போங்க!

‘சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ இந்த ஜோக்ஸ படிச்சுட்டு போங்க!

Priyadarshini R HT Tamil

Dec 06, 2024, 02:34 PM IST

google News
சிரித்து, சிரித்து மகிழ சூப்பரான ஜோக்குகள்.
சிரித்து, சிரித்து மகிழ சூப்பரான ஜோக்குகள்.

சிரித்து, சிரித்து மகிழ சூப்பரான ஜோக்குகள்.

ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.

சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்

சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கும் வகையிலும் நகைச்சுவை காட்சிகளை அமைப்பார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.

எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இன்று சிந்தனைக்கு அல்ல; வாய் விட்டு சிரிச்சுட்டு மட்டும் போங்க. இதோ மொக்க ஜோக்குகள்.

உங்களை கலகலவென சிரிக்க வைக்கும் மொக்க ஜோக்குகள் இதோ!

ஆமா கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணணும்?

அதுகிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.

 

முட்டையே போடாத பறவை, அது என்ன பறவை?

அதாங்க ஆண் பறவை!

 

எந்த காட்டிலும் கிடைக்காத பூச்சி, அது என்ன பூச்சி?

அதாங்க கண்ணாம்பூச்சி! ஹாஹாஹா!

 

உலகத்திலேயே எந்த நரி பெரிய நரி?

வேற எது? டிக்ஷ்னரி தான்!!!!

 

பேச முடியாத வாய் எது?

செவ்வாய்! ஹாஹாஹா!

 

கடை தோசைக்கும், வீட்டு தோசைக்கும் என்ன வித்யாசம்?

விளக்கமாத்தால அடிச்சுட்டு ஊத்தினா அது கடை தோசை, தோசை ஊத்திட்டு வௌக்கமாத்த எடுத்தா அது வீட்டு தோசை! ஹாஹாஹா!

 

ஒருத்தர் கார் டேங்க்க ஓப்பன் பண்ணி சிரிச்சாரம்? ஏன்?

மனசு விட்டு சிரிச்சா ஆயில் கூடும்னு யாரோ சொன்னாங்களாம்!!!!

 

ஒரு டாக்டர் பணம் கொடுக்கலன்னா பல்ல பிடுங்கிடுவாராம் அவர் யார்?

ஏன்னா அவரு பல் டாக்டராம்!

 

இட்லியில் இருந்து ஏன் ஆவி வருது?

ஏன்னா அது செத்து போயிட்டுச்சு! ஹாஹாஹா!

 

ஒருவரோட தலையில இருந்து இலையா கொட்டுச்சாம், ஏன்?

ஏன்னா அவன் மரமண்டையாம்!

 

கோழி ஏன் முட்டை போடுது?

ஏன்னா அதுக்கு ஒன்னு, ரெண்டு, மூனு தெரியாது. அதான் முட்டை போடுது.

இன்றைய மோட்டிவேஷன் லைன்

நீங்கள் பல ஆண்டுகள் நிலைத்து வாழப்போவதைப் போல் கற்றுக்கொள்ளுங்கள், நாளையே மரணித்துவிடுவது போல் வாழுங்கள் – மகாத்மா காந்தி.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி