கம்பு – கருப்பட்டி அல்வா; வித்யாசமான ஸ்வீட்! தின்னத்தின்ன தெவிட்டாத சுவையுடன், ஆரோக்கியமும் தரும்!
Dec 13, 2024, 05:21 PM IST
சத்துக்கள் நிறைந்த கம்பு கருப்பட்டி அல்வா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
கம்பு – ஒரு கப்
(கம்பை நன்றாக அலசிவிட்டு,12 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். ஊறிய கம்பை எடுத்து அரைத்து பால் பிழிந்துகொள்ளவேண்டும். பாலின் அளவே தண்ணீரும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது ஒரு கப் பாலுக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும்)
கருப்பட்டி – ஒரு கப் பாலுக்கு ஒரு கப்
நாட்டுச்சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய் – 2
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
முந்திரி – ஒரு கைப்பிடியளவு
(நெய்யில் வறுத்து எடுத்து தனியான வைத்துக்கொள்ளவேண்டும்.
செய்முறை
கம்பு பாலில் போதிய அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்றாக கலக்கவேண்டும். இதை கலந்துகொண்டே இருக்கவேண்டும். தொடர்ந்து கலந்துகொண்டே வரும்போது கம்பு கெட்டியாகி வரும்.
அப்போது கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரையை சேர்க்கவேண்டும். அனைத்தையும் ஒன்றாக கிளறி ஏலக்காயை தூவவேண்டும். அடுத்து நெய்யையும் சேர்த்து கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.
வறுத்த முந்திரி சேர்த்து அல்வா பதமும், நெய் பிரிந்தும், உருண்டு, திரண்டு வரும்போது இறக்கினால் சூப்பர் சுவையான கம்பு அல்வா தயார். இது வித்யாசமான ஸ்வீட்டு ரெசிபி ஆகும்.
உங்கள் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் இந்த கம்பு அல்வா. இது சுவையானதுடன், ஆரோக்கியமானதும் கூட. நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அரிசியை விட கம்பில் 8 மடங்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம உள்ளது. எனவே இந்த கம்பு கருப்பட்டி அல்வாவை கட்டாயம் சுவைத்துப் பாருங்கள்.
கம்பில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது.
கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை செரிமானம் மெதுவாக நடக்க உதவுகிறது. கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
கம்பில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.
சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக்கொள்ளாமைக்கு சிறந்தது. இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.
வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து கிடைக்காமல் போகிறது. கம்பு அந்த குறையை போக்கி, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குகிறது. இதை ராஜ்மா, பாசிபருப்பு, கொண்டடைக்கடலை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உடலுக்கு மேலும் பல நன்மைகளை வழங்குகிறது.
கம்பில் பொட்டாசியச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.
கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது. கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது.
கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது.
உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது. குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்த உணவாகிறது.
டாபிக்ஸ்