தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Peanut Chutney : சத்தான வேர்க்கடலைசட்னி! காலை உணவை மேலும் யம்மியாக்கும்! இதோ ரெசிபி!

Peanut Chutney : சத்தான வேர்க்கடலைசட்னி! காலை உணவை மேலும் யம்மியாக்கும்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil

Apr 14, 2024, 10:00 AM IST

google News
Peanut Chutney : இத்தனை நன்மைகள் நிறைந்த கடலையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான வழியாக இந்த கடலை சட்னியை உணவில் சேர்த்துக்கொள்வது உள்ளது. எனவே இந்த சட்னியை சேர்த்து பயன்பெறுங்கள்.
Peanut Chutney : இத்தனை நன்மைகள் நிறைந்த கடலையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான வழியாக இந்த கடலை சட்னியை உணவில் சேர்த்துக்கொள்வது உள்ளது. எனவே இந்த சட்னியை சேர்த்து பயன்பெறுங்கள்.

Peanut Chutney : இத்தனை நன்மைகள் நிறைந்த கடலையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான வழியாக இந்த கடலை சட்னியை உணவில் சேர்த்துக்கொள்வது உள்ளது. எனவே இந்த சட்னியை சேர்த்து பயன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – ஒரு கப்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 5 பற்கள்

புளி – சிறிதளவு

கல் உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 2

பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை -

ஒரு கடாயில் வேர்க்கடலையை சேர்த்து முழுவதுமாக பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.

அவற்றை முழுவதுமாக ஆறவைத்து, அவற்றின் தோலை அகற்றி, கடலை முத்துக்களை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து சூடாக்கவேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவேண்டும்.

சில நொடிகள் வதக்கி, புளி துண்டுகளை சேர்க்கவேண்டும். வெங்காயம் வதங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் வதக்கிய அனைத்தையும் ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் வறுத்த வேர்க்கடலை, கல் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவேண்டும்.

சிறிது தண்ணீர் சேர்த்து, அனைத்தையும் நன்றாக சட்னி பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து பொரியவிட வேண்டும்.

கடுகு பொரிய ஆரம்பித்தவுடன், சிவப்பு மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.

தாளிப்பை சட்னிக்கு மாற்றி நன்றாக கலக்கவேண்டும்.

சுவையான வேர்க்கடலை சட்னி சூடான இட்லிகள் அல்லது தோசைகளுடன் பரிமாற தயாராக உள்ளது.

கடலை சட்னி அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கும். நிறைய பேர் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்தால், நீங்கள் வேர்க்கடலை சட்னியை எளிதாக செய்துவிடலாம்.

இங்கு வெங்காயம் வைத்து செய்யப்படும் வேர்க்கடலை சட்னியின் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காயத்துக்கு பதில் தேங்காய் சேர்த்தும் இந்த சட்னியை செய்யலாம்.

இந்த சட்னியை செய்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு உங்களுக்கு தேவைப்படும்போது சாப்பிட்டு மகிழலாம். அதற்கு தேங்காய் சேர்க்காமல் செய்ய வேண்டும். 

தேங்காய் சேர்த்தால் நீங்கள் 2 அல்லது 3 நாட்கள் இந்த சட்னியை வைத்துக்கொள்ள முடியாது. தேங்காய் சேர்த்தால் ஒரே நாளில் சாப்பிட்டு தீர்த்துவிடவேண்டும்.

இந்தச்சட்னியை அதிக மையாக அரைக்கக் கூடாது. கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும். 

இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

நிலக்கடலையில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் கடலையில், 564 கலோரிகள், ஈரப்பதம் 6 சதவீதம், புரதச்சத்து 26 கிராம், கார்போஹைட்ரேட் 18.6 கிராம், கரையக்கூடிய சர்க்கரை 4.5 சதவீதம், நார்ச்சத்துக்கள் 2.1 சதவீதம், கொழுப்பு 47.5 கிராம், எண்ணெய் 48.2 சதவீதம், ஸ்டார்ச் 11.5 சதவீதம் உள்ளது.

கால்சியம் 69 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 401 மில்லிகிராம், மெக்னீசியம் 168 மில்லிகிராம், வைட்டமின் பி 3 17.2 மில்லிகிராம், வைட்டமின் பி1 1.14 மில்லிகிராம் உள்ளது.

ஈசிமா உள்ளிட்ட பல சரும நோய்களை கடலை தீர்க்கிறது. இதில் ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து காக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்து, நமது உடலில் உள்ள கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இதில் உள்ள ஆரோக்கியமான அன்சாச்சுரேடட் கொழுப்புகள், புரதம், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், ஃபோலேட், தியாமின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.

கடலை மூளைக்கு மிகவும் நல்லது. இதில் பாலி அன்சாச்சுரேடட் கொழுப்பு, மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பு, வைட்டமின் பி3 போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மூளையை பலப்படுத்த உதவுகிறது. அதன் மூலம் நினைவாற்றலை பெருகச் செய்கிறது.

கடலையில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை குறைபாடு ஆகியவற்றுக்கு உதவுகிறது. ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள், இனப்பெருக்க செல்களின் தன்மையை அதிகரிக்கிறது.

பெண்களின் உடலில் மெக்னீசியச்சத்து குறைபாடு இருந்தாலும், அது கருவுறுதலை தடுக்கும். கடலையில் உள்ள ஃபோலேட்கள், கருத்தரிக்கும் முன்னரும், பின்னரும் நன்மை கொடுக்கிறது.

இது எனர்ஜி நிறைந்த ஒன்று என்பதால், இது அதிக நேரம் உங்களை திருப்தியாக வைக்கிறது. பசி மேலாண்மைக்கு உதவுகிறது. இதனால் தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிட்டு உங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. இதில் உள்ள புரதம் உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது.

கடலையில் டிரிட்டோஃபான் உள்ளது. இது செரோட்டினின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க வைக்க உதவும் அமினோ அமிலம் ஆகும். இது மனஉளைச்சலை போக்க உதவுகிறது. எனவே இதை கைப்பிடியளவு எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் செரோட்டினின் அளவை அதிகரித்து மனஉளைச்சலை போக்குகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த கடலையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான வழியாக இந்த கடலை சட்னியை உணவில் சேர்த்துக்கொள்வது உள்ளது. எனவே இந்த சட்னியை சேர்த்து பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி