Peanut Rice : சத்தானது மட்டுமல்ல சுவையானதும் வேர்க்கடலை சாதம்! – லஞ்ச் பாக்ஸ்க்கு சிறந்தது!
Peanut Rice : சத்தானது மட்டுமல்ல சுவையானதும் வேர்க்கடலை சாதம். லஞ்ச் பாக்ஸ்க்கு சிறந்தது.
வேர்க்கடலை சாதம் செய்ய தேவையான பொருட்கள்
வேர்க்கடலை பொடி செய்ய
கடலை எண்ணெய் - 1/2 ஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
வெள்ளை எள்ளு - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 7
கொப்பரை தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் துருவியது
வேர்கடலை சாதம் செய்ய
கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 2
பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை
வேகவைத்த சாதம்
உப்பு
அரைத்த வேர்க்கடலை பொடி
நெய்
செய்முறை –
ஒரு கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்த்து, வேர்க்கடலையை நன்றாக வறுக்கவேண்டும். அதில் அடுத்ததாக உளுத்தம் பருப்பு, வெள்ளை எள்ளு அல்லது கருப்பு எள்ளு, ஏதேனும் ஒன்றை அடுத்ததாக சேர்க்கவேண்டும்.
மிதமான தீயில் அதிலே வர மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். இப்போது கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து அரைக்க வேண்டும். கொப்பரை தேங்காய் துருவல் கிடைக்காதபோது, புதிய தேங்காய் துருவலையே சேர்த்த நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக்கலவையை நன்றாக ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சூடான உடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, கடலை, வர மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து சாதத்தை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடி சேர்த்து நன்றாக அனைத்தையும் கலந்துவிடவேண்டும்.
கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளற, சுவையான சத்தான, வித்யாசமான வேர்க்கடலை சாதம் கிடைத்துவிடும்.
இந்த வேர்க்கடலைப் பொடியை நீங்கள் எளிதாக செய்துவிடலாம். சுவை மிகுந்ததாகவும், மணம் நிறைந்தததாகவும் இருக்கும். இது வறுத்த கடலை மற்றும் மசாலாக்களில் இருந்து செய்யப்படுகிறது.
வழக்கமான வெரைட்டி சாப்பாடுகளே சாப்பிட்டு உங்களுக்கு போர் அடிக்கிறதா? எனில் நீங்கள் இந்த சுவை நிறைந்த வேர்க்கடலை சாதத்தை தயார் செய்து சாப்பிடலாம். மேலும் இது ஒரு சிறந்த லஞ்ச் பாக்ஸ் உணவாகும்.
இதற்கு பெரியளவில் சைட் டிஷ் தேவைப்படாது. சாதம் மட்டுமே சுவையாக இருக்கும். தேங்காய் துவையல், ரைத்தா வைத்தே சமைத்துவிடலாம் அல்லது ஏதேனும் ஒரு கிரேவி வைத்து பரிமாறலாம். இதை நீங்கள் மீந்த சாதத்திலும் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். இதை நீங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு, மகிழுங்கள்.
நீங்கள் இந்த மிக்ஸை தயாரித்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
டாபிக்ஸ்