தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பன்னீர் கிரீன் கிரேவி; சாப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்! ஒருமுறை ருசித்தால் விடமாட்டீர்கள்!

பன்னீர் கிரீன் கிரேவி; சாப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்! ஒருமுறை ருசித்தால் விடமாட்டீர்கள்!

Priyadarshini R HT Tamil

Dec 07, 2024, 12:10 PM IST

google News
சப்பாத்திக்கு சுவையான பன்னீர் கிரீன் கிரேவி செய்யலாமா?
சப்பாத்திக்கு சுவையான பன்னீர் கிரீன் கிரேவி செய்யலாமா?

சப்பாத்திக்கு சுவையான பன்னீர் கிரீன் கிரேவி செய்யலாமா?

பன்னீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இது பக்கவாதம் வராமல் தடுக்கிறது. இது தசைகளில் வலி ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது. மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் அடிக்கடி வலியால் பாதிக்கப்படுவார்கள். பன்னீரை தினமும் எடுத்துக்கொண்டால், அது வலிகளை குறைக்கிறது. இதில் உள்ள அதிகளவிலான கால்சியம், எலும்புகளை காக்கிறது. இதில் அதிகளவில் சிங்க் உள்ளது. அது ஆண்களின் ஸ்பெர்ம் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பன்னீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு நன்மைகளுக்காக எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அனைவரும் விரும்பும் ஒன்றாகவும் இந்த பன்னீர் பட்டர் மசாலா இருக்கும். அதை எளிமையாக குக்கரில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு – 4 பல்

பச்சை மிளகாய் – 2

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

புதினா – ஒரு கைப்பிடியளவு

பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மிளகுத் தூள் – அரை ஸ்பூன்

தயிர் – கால் கப் (பீட் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

பட்டை – 1

கிராம்பு – 2

சீரகம் – அரை ஸ்பூன்

பிரியாணி இலை – 1

ஸ்டார் சோம்பு – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து பன்னீரை சிறிய துண்டுகளாக்கி, பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, புதினா, இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். அதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, பிரியாணி இலை, சீரகம் மற்றும் ஏலக்காய் தாளிக்கவேண்டும். அடுத்து கறிவேப்பிலையை சேர்த்து பொரியவிடவேண்டும்.

அதில் அரைத்து வைத்துள்ள பச்சை விழுதை சேர்க்கவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கரம் மசாலா என அனைத்தும் சேரத்துக்கொள்ளவேண்டும். அடித்து வைத்துள்ள தயிரையும் சேர்க்கவேண்டும். நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்போது, வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து நன்றாக கலக்கிவிடவேண்டும். சூப்பர் சுவையான பன்னீர் கிரீன் கிரேவி தயார்.

இதை சப்பாத்தி, பூரி, ரொட்டி, ஃபுல்கா என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். எண்ணெய்க்கு பதில் வெண்ணெய் அல்லது நெய் கூட சேர்த்து இந்த பன்னீர் கிரீன் கிரேவியை செய்யலாம்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி