மசாலா முட்டை போண்டா; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஸ்னாக்ஸ்!
Dec 07, 2024, 11:41 AM IST
மசாலா முட்டை போண்டா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் முட்டைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். முட்டை புரதச்சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம். ஊட்டச்சத்துக்களின் உறைவிடம் என்றும் கூறலாம். முட்டையில் இருந்து கிடைக்கும் புரதம் உயர் தர புரதம் ஆகும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. நீங்கள் தினமும் 2 வேகவைத்த முட்டைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். எனவே தினமும் உங்கள் உணவில் முட்டைகள் எடுப்பதை உறுதிப்படுத்தி உங்கள் ஆரோக்கியம் மேம்பட வழிவகுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். முட்டைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு புரதம் (ஒரு முட்டையில் 6 கிராம் உள்ளது), வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12 (2 வேகவைத்த முட்டையில் 1.6 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது), முட்டையில் 0.6 கிராம் வைட்டமின் பி2 உள்ளது. 24 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. 2 முட்டையில் 28 மைக்ரோகிராம் செலினியச்சத்துக்கள் உள்ளது. கோலைன்கள் நிறைந்தது. இரும்புச்சத்துக்கள், சிங்க் சத்துக்கள் கொண்டது. இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டையை நீங்கள் தினமுமே சாப்பிட வேண்டும்.
இதை வேகவைத்து சாப்பிடுவது, ஆம்லேட், பொரியல் என ஒரே மாதிரி சாப்பிட்டால் போர் அடிக்கும். அதற்காக முட்டை போண்டா செய்து சாப்பிடலாம். ஆனால் அதுவும் உங்களுக்கு போர் அடிக்கும்போது, மசாலா முட்டை போண்டாவை செய்து சாப்பிடுங்கள். இதோ சூப்பர் சுவையான ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
முட்டை – 4
இட்லி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – கால் ஸ்பூன்
பிரியாணி மசாலாத்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான பொருட்கள்
கடலை மாவு அல்லது பஜ்ஜி மாவு – ஒரு கப்
செய்முறை
முட்டையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பஜ்ஜி மாவை ஒரு பவுலில் கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதற்கான மசாலாதான் முக்கியமானது.
ஒரு கடாயில் எண்ணெயை சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கவேண்டும். அதில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், பிரியாணி மசாலாத்தூள், உப்பு என அனைத்தையும் சேர்தது நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். மசாலா வதங்கி நல்ல சுவையானதாக இருக்கும்.
வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி, அதன் இடையில் இரண்டு ஸ்பூன் இந்த மசாலாவை வைத்து, கரைத்து வைத்த பஜ்ஜி மாவில் சேர்த்து பிரட்டவேண்டும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, இந்த முட்டை போண்டாக்களை பொரித்து எடுக்கவேண்டும். இது சூப்பர் சுவையானது மற்றும் ஆரோக்கியமானதும் ஆகும். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இதை மழை நேரத்தில் சூடாக செய்து சாப்பிட, மழையும் குதூகலமாகும். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சாப்பிடவேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
டாபிக்ஸ்