தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  One Lakh Diyas Lighted In Meenakshi Temple In Madurai For Karthigai Deepam

திருக்கார்த்திகை-மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1 லட்சம் தீபங்கள் ஏற்றி வழிபாடு

I Jayachandran HT Tamil

Dec 06, 2022, 09:00 PM IST

உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா டிசம்பர் 1ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weight Loss Tips: உடல் எடை குறைக்க உதவும் சைக்கிள், நீச்சல் பயிற்சி! இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா

Relationship : உணர்வுகளை தீர்மானிக்கும் அனுபவங்கள்! உறவுகளை மேம்படுத்த எப்படி உதவும்? விளக்கம்!

Benefits of Ice Apple : வெயில் காலத்தில் ஹீட் ஸ்ரோக் வராமல் தடுக்க வேண்டுமா? கண்டிப்பாக இதை சாப்பிடுங்கள்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளை புத்தக புழுவாக்க வேண்டுமா? எனில் இதை செய்ய மறக்காதீர்கள்!

இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயில் பொற்றாமரை குளம் முழுவதும் 1 லட்சம் தீபங்கள் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக்குளம், அம்மன் , சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் 1 லட்சம் தீபங்களை ஏற்றினர்.

இதனால் கோயில் முழுக்க ஜெகஞ்ஜோதியாகக் காட்சியளித்தது. பக்தர்கள் பரவசத்துடன் சாமி கும்பிட்டனர்.