தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Ice Apple : வெயில் காலத்தில் ஹீட் ஸ்ரோக் வராமல் தடுக்க வேண்டுமா? கண்டிப்பாக இதை சாப்பிடுங்கள்!

Benefits of Ice Apple : வெயில் காலத்தில் ஹீட் ஸ்ரோக் வராமல் தடுக்க வேண்டுமா? கண்டிப்பாக இதை சாப்பிடுங்கள்!

Priyadarshini R HT Tamil

Apr 28, 2024, 10:56 AM IST

Benefits of Ice Apple : பனை மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நுங்கு தரும் நன்மைகள் என்ன? அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக இந்த நுங்கு உள்ளது. இது உடலை குளிர்விப்பதுடன் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.
Benefits of Ice Apple : பனை மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நுங்கு தரும் நன்மைகள் என்ன? அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக இந்த நுங்கு உள்ளது. இது உடலை குளிர்விப்பதுடன் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.

Benefits of Ice Apple : பனை மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நுங்கு தரும் நன்மைகள் என்ன? அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக இந்த நுங்கு உள்ளது. இது உடலை குளிர்விப்பதுடன் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.

நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் 

நீர்ச்சத்து

நுங்கு நீர்ச்சத்துக்கள் நிறைந்தது. இது உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. இதனால், வெப்பத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ரோக் எனப்படும் வெப்ப வாதம் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடலின் வெப்பநிலையை முறைப்படுத்த உதவுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Groundnut Oil: சர்க்கரை நோயாளிகள் கடலை எண்ணெய் சாப்பிடுவது பாதுகாப்பானதா? இதில் இத்தனை விஷயம் இருக்கா!

Benefits of Banana Flower : அம்மாடியோவ்! இத்தனை நன்மைகளா? இந்த வாழைப்பூவால் உங்களுக்கு எத்தனை பயன் பாருங்கள்?

Bitter Gourd kuzhambu : பாகற்காய்குழம்பை கசப்பு சுவையின்றி செய்வது எப்படி? இந்த ஒரு டெக்னிக் மட்டும் போதும்!

Paneer Biryani Recipe: சனிக்கிழமை ஸ்பெஷல்.. சிக்கன், மட்டன் பிரியாணி சுவையை ஓரங்கட்டும் பன்னீர் பிரியாணி

குறிப்பாக வெயில் காலத்தில் இது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் வெயில் தொடர்பான உபாதைகள் மற்றும் அசவுகர்யங்களையும் குறைக்கிறது.

செரிமானம்

நுங்கு செரிமானதுக்கு உதவுகிறது. இது குடல் இயக்கத்தை ஊக்குவித்து, செரிமான கோளாறுகளைப் போக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளில் இருந்து உங்களை விடுகிக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

நுங்கு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் உடலுக்கு தேவையான மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதனால் உடலின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியம்

நுங்கில் அதிகளவில் பொட்டாசியம் மற்றும் குறைவான சோடியம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இதய கோளாறுகள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

சரும ஆரோக்கியம்

நுங்கில் உள்ள நன்மைகள் சருமத்தை பராமரிக்கிறது. சருமத்துக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொடுக்கிறது. இதனால் சருமம் பொலிவடைகிறது. சருமத்தின் ஆரோக்கியம் மிளிர்கிறது.

சோர்வை போக்குகிறது

நுங்கு சாப்பிட்டவுடன் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. இதை ஒரு சிறந்த ஸ்னாக்ஸாக்குகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது

நுங்கு, லோ கிளைசமிக் இண்டக்ஸில் உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகள் இதை தயக்கமின்றி எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிரடியாக அதிகரிக்கச் செய்வதில்லை.

வாந்தி மயக்கத்தை போக்குகிறது

நுங்கு உங்களுக்கு ஏற்படும் வாந்தி மற்றும் மயக்கத்தை போக்குகிறது. செரிமான கோளாறுகளை சரிசெய்து வாந்தி, மயக்கத்தை போக்குகிறது.

குடல் ஆரோக்கியம்

நுங்கில் உள்ள அந்தெல்மின்டிக் பண்புகள், குடற் புழுக்களை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இருமலை போக்குகிறது

சளியை வெளியேற்றி இருமலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சுவாச கோளாறுகளை சரிசெய்கிறது.

சிறுநீர் கழிப்பதில் உள்ள அசவுகர்யங்களைப் போக்குகிறது

சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி மற்றும் அசவுகர்யங்களை போக்குகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்து போராடுகிறது

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டை போக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

நுங்கில் உள்ள சத்துக்கள் 

100 கிராம் நுங்கில் 38 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட்கள் 9.2 கிராம், நார்ச்சத்துக்கள் 1.1 கிராம், புரதம் 0.6 கிராம், கொழுப்பு 0.1 கிராம், பொட்டாசியம் 150 மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம், மெக்னீசியம் 10 மில்லி கிராம், கால்சியம் 8 மில்லி கிராம், வைட்டமின் சி 6.4 மில்லிகிராம், இரும்புச்சத்து 0.6 மில்லிகிராம் உள்ளது.

நுங்கு ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

நுங்கு உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுத்தாலும், அதை அதிகம் எடுத்துக்கொண்டாலோ அல்லது முற்றிய நுங்கை சாப்பிட்டாலோ உடலில் பல்வேறு தீங்குகளை விளைவிக்கும்.

கல்லீரல் பாதிப்பு

இதில் உள்ள எத்தனால் என்ற உட்பொருள், உங்கள் கொழுப்பு வளர்சிதையில் இடையூறு ஏற்படுத்தி, அதிகம் உட்கொள்வது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கல்லீரலில் கொழுப்பு சேர்கிறது. குறிப்பாக இது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ரத்த அழுத்த பாதிப்பு

நுங்கு அதிகமாக உட்கொள்ளும்போது ரத்த அழுத்தத்தில் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இதயம் படபடப்பு, மூச்சுத்திணறல், இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நரம்புகளை பாதிக்கிறது

நுங்கு அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, அது நரம்பியல் பிரச்னைகளையும், தசை இறுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. முற்றிய நுங்கு வயிறு கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி