தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Navaratri Prasadam: உங்க வீட்டுல கொலு வச்சு இருக்கீங்களா? பிரசாத லிஸ்ட் ரெடி!

Navaratri Prasadam: உங்க வீட்டுல கொலு வச்சு இருக்கீங்களா? பிரசாத லிஸ்ட் ரெடி!

Suguna Devi P HT Tamil

Oct 03, 2024, 11:34 AM IST

google News
Navaratri Prasadam: இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து விழாக்களில் முக்கியமான விழாவாக நவராத்திரி விழா உள்ளது. இது ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபட்ட கொண்டாட்ட முறைகளை கொண்டுள்ளது.
Navaratri Prasadam: இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து விழாக்களில் முக்கியமான விழாவாக நவராத்திரி விழா உள்ளது. இது ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபட்ட கொண்டாட்ட முறைகளை கொண்டுள்ளது.

Navaratri Prasadam: இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து விழாக்களில் முக்கியமான விழாவாக நவராத்திரி விழா உள்ளது. இது ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபட்ட கொண்டாட்ட முறைகளை கொண்டுள்ளது.

இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து விழாக்களில் முக்கியமான விழாவாக நவராத்திரி விழா உள்ளது. இது ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபட்ட கொண்டாட்ட முறைகளை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் இது கொலு வைத்து 9 நாட்கள் இரவு பூஜை செய்து வழிபாடு நடத்தி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியானது அம்பிகை மகிஷாசூரன் எனும் அரக்கரை அளிக்க 9 நாட்கள் தவம் இருந்து சக்தியை பெற்று அந்த அரக்கரை அளித்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த விழாவை 9 நாட்கள் அம்மனுக்கு பூஜை செய்தி வழிபடுகின்றனர். இந்த 9 நாட்களும் வீடுகளுக்கு கொலு பார்க்க வருவோர்க்கு பிரசாதம் வழங்க வேண்டும். அதற்கான சில பிரசாத உணவு செய்யும் முறைகளை இங்கு காண்போம். 

பருப்பு செய்யும் பொடி 

பிரசாதமாக கொடுக்க விரும்பும் பயறுகளுடன் பொடியை சேர்க்க வேண்டும். அதற்கு 1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் சீரகம், 2 காய்ந்த மிளகாய், 1 டீஸ்பூன் தேங்காய் துண்டு ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

ராஜ்மா

ராஜ்மா செய்வதற்கு முதல் ஒரு கப் ராஜ்மாவை ஊற வைத்து, வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிதளவு தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், ராஜ்மா, மஞ்சள் தூள், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறவும். பிறகு, அதில் பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

பாசிபருப்பு சுண்டல் 

பாசிப்பருப்பு சுண்டல் செய்வதற்கு முதலில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். மேலும் பாசிபருப்பு சுண்டலை ஊற வைத்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். பிறகு, வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும். பின், அரைத்த கலவையையும் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

இது போன்றே சுண்டல், காராமணி, கடலை பருப்பு என அனைத்து பருப்பு வகைகளையும் வைத்து வதக்கி செய்லாம். மேலும் வீட்டில் கொலு வைக்கும் போது சுண்டல் வகைகளை தவிர இனிப்பு பிரசாதமும் வழங்கலாம். 

பாசிப்பருப்பு பாயாசம் 

முதலில் பாசி பருப்பை கடாயில் போட்டு மிதமான  சூட்டில் வறுத்துக்கொள்ளவும். பின் அதை குக்கரில் 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தக் கொள்ளவும். பச்சரிசியை ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை உருக்கிக்கொள்ளுங்கள். பருப்பு வெந்ததும் பச்சரிசி தண்ணீரை ஊற்றி கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். கெட்டியான பதம் வரும் வரைக் கொதிக்க விடவும். இறுதியாக நெய் விட்டு முந்திரி சேர்த்து வதக்கி பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும். பாசி பருப்பு பாயாசம் தயார்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி