Karamani Gravy : காரஞ்சாரமான காராமணி கறியை இப்படி செஞ்சு பாருங்க; மீண்டும் மீண்டும் கேட்டுக்கேட்டு ருசிப்பீர்கள்!
Karamani Gravy : காரஞ்சாரமான காராமணி கறியை இப்படி செஞ்சு பாருங்க; மீண்டும் மீண்டும் வேண்டுமென்று கேட்டுக்கேட்டு ருசிப்பீர்கள்.
தேவையான பொருட்கள்
காராமணி – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
முழு கரம் மசாலா (பட்டை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, பிரியாணி இலை – 1, ஸ்டார் சோம்பு – 1)
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தக்காளி விழுது – சிறிதளவு (ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
சீரகப் பொடி – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லித் தூள் – ஒன்றரை ஸ்பூன்
ஆம்சூர் பொடி – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
கொத்துமல்லித் தழை – கைப்பிடியளவு
செய்முறை
காராமணியை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். ஊற வைத்த காராமணியை பிரஷர் குக்கரில் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் தண்ணீர் சேர்க்கவேண்டும்.
மிதமான தீயில் 4 முதல் 5 விசில்கள் வரும் வரை வேகவைக்கவேண்டும். ஒரு அகன்ற கடாயில் எண்ணெய் எடுத்து, அதில் சீரகம், சோம்பு, முழு கரம் மசாலா சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
வெங்காயத்தை அதிக தீயில் 5 நிமிடங்கள் வதக்கவேண்டும். வெங்காயம் பிரவுன் நிறத்தில் வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் உப்பு, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரகத் தூள், கொத்தமல்லித் தூள், ஆம்சூர் தூள் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். வேகவைத்த காராமணியை தண்ணீருடன் சேர்க்கவேண்டும்.
மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி நன்றாக கொதிக்கவிடவேண்டும். கடைசியில் கரம் மசாலா தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவேண்டும். காராமணி கறி தயார். இதை ரொட்டி மற்றும் சாதத்துடன் சூடாக பரிமாறினால், சுவை அள்ளும்.
காராமணியின் நன்மைகள்
ஒரு கப் காராமணயில் 194 கலோரிகள் உள்ளது. இதில் 13 கிராம் புரதம், 0.9 கிராம் கொழுப்பு, 35 கிராம் கார்போஹைட்ரேட், 11 கிராம் நார்ச்சத்து, 88 சதவீதம் ஃபோலேட், 50 சதவீதம் காப்பர், 28 சதவீதம் தியாமின், 23 சதவீதம் இரும்பு, 21 சதவீதம் பாஸ்பரஸ், 21 சதவீதம் மெக்னீசியம், 20 சதவீதம் சிங்க், பொட்டாசியம் 10 சதவீதம், வைட்டமின் பி6 10 சதவீதம், செலினியம் 8 சதவீதம், ரிபோஃப்ளேவின் 7 சதவீதம் உள்ளது.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது.
சரும ஆரோக்கியத்துக்கு நல்லது.
தொற்றுக்ளை கட்டுக்குள் வைக்கிறது.
கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பத்தை எதிர்நோக்குபவர்களுக்கு நல்லது.
தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
புற்றுநோயை தடுக்கிறது.
அனீமியாவை தடுக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது.
நோய் எதிர்ப்புக்கு உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்