Homemade Paruppupodi: இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான பருப்பு பொடி! குழம்பு வைக்கவே தேவையில்லை!-how to prepare paruppu podi in home - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Homemade Paruppupodi: இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான பருப்பு பொடி! குழம்பு வைக்கவே தேவையில்லை!

Homemade Paruppupodi: இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான பருப்பு பொடி! குழம்பு வைக்கவே தேவையில்லை!

Suguna Devi P HT Tamil
Sep 30, 2024 03:27 PM IST

Homemade Paruppupodi: பல சைவ உணவகங்களில் முக்கிய பொருளாக பருப்பு பொடி இருக்கும். இதனை பெரும்பான்மையானோர் விரும்பி சாப்பிடுவர். இது அனைத்து உணவுப் பொருட்களுடன் சாப்பிடும் சிறந்த சைடிஷ் ஆக இருந்து வருகிறது.

Homemade Paruppupodi: இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான பருப்பு பொடி! குழம்பு வைக்கவே தேவையில்லை!
Homemade Paruppupodi: இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான பருப்பு பொடி! குழம்பு வைக்கவே தேவையில்லை!

தேவையான பொருட்கள்

100 கிராம் துவரம் பருப்பு

100 கிராம் பாசி பருப்பு

100 கிராம் பொரிகடலை

10 காய்ந்த மிளகாய்

10  பல் பூண்டு

2 டீஸ்பூன் சீரகம்

சிறிதளவு பெருங்காயம்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

முதலில் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் துவரம் பருப்பை போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும். அதே கடாயில் பாசி பருப்பு, பொரிகடலை ஆகியவற்றை தனித்தனியாக போட்டு அதை நன்கு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதே கடாயில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும். இப்பொழுது அதே கடாயில் சீரகம் மற்றும் பெருங்காய கட்டியை போட்டு சீரகம் நன்கு பொரிந்து வரும் வரை அதை வறுக்கவும். சீரகம் நன்கு பொரிந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

பிறகு அதே கடாயில் ஒரு கை அளவு கறிவேப்பிலையை போட்டு அது நன்கு மொறு மொறுப்பான பதத்தை எட்டும் வரை அதை வறுக்கவும். கறிவேப்பிலை மொறு மொறுப்பான பதத்தை எட்டியதும் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும். பின்பு அந்த கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சூடான பின் அதில் தோலை உரித்து வைத்திருக்கும் பூண்டை போட்டு அதை நன்கு மொறு மொறுப்பான பதம் வரும் வரை அதை வறுக்கவும். பூண்டு மொறு மொறுப்பான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

பின்பு இவை அனைத்தும் ஆறியதும்  அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். பிறகு சாதத்தில் நெய் ஊற்றி நாம் அரைத்த பொடியை போட்டு அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது  சூடான மற்றும் மிகவும் சுவையான பருப்பு பொடி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். வீட்டில் அவசரமாக குழம்பு வைக்க முடியாத சமயங்களில் இந்த பருப்பு பொடி மற்றும் நெய் ஊற்றி சாதத்தை சாப்பிடும் போது மிகுந்த சுவையாக இருக்கும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.