தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வாரத்தில் கட்டாயம் 2 நாட்கள் சாப்பிடவேண்டும்! கேசரி பருப்பு; மசூர் தாலின் நன்மைகள் என்ன?

வாரத்தில் கட்டாயம் 2 நாட்கள் சாப்பிடவேண்டும்! கேசரி பருப்பு; மசூர் தாலின் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil

Oct 11, 2024, 12:33 PM IST

google News
வாரத்தில் கட்டாயம் 2 நாட்கள் சாப்பிடவேண்டும். கேசரி பருப்பு, மசூர் தாலின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
வாரத்தில் கட்டாயம் 2 நாட்கள் சாப்பிடவேண்டும். கேசரி பருப்பு, மசூர் தாலின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

வாரத்தில் கட்டாயம் 2 நாட்கள் சாப்பிடவேண்டும். கேசரி பருப்பு, மசூர் தாலின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேசரி பருப்பை வாரத்தில் 2 நாட்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். கேசரி பருப்பில உள்ள நன்மைகளை பாருங்கள். கேசரி பருப்பு, சிவப்பு பருப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பருப்புகளுள் ஒன்றாகும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் எடுத்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இதை நீங்கள் அன்றாட உணவில் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு 10 காரணங்கள் உள்ளது. அவை என்னவென்று பாருங்கள்.

புரதம்

கேசரி பருப்பில் தாவர அடிப்படையிலான புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சைவ பிரியர்களுக்கான சிறந்த தேர்வாகும். இது தசைகளின் வளர்ச்சிக்கும், திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது. உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடனும் வைத்துக்கொள்கிறது.

செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

கேசரி பருப்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்களின் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. உங்களின் குடல் சீராக இயங்க உதவுகிறது.

எடை மேலாண்மை

நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கலோரிகள் குறைவாக உள்ளது. கேசரி பருப்பு உங்களுக்கு நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது. இது உங்களின் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதை உங்கள் எடை குறைப்பு பயணத்தில் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இது உங்களின் உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

கேசரி பருப்பில் உள்ள செரிந்த கார்போஹைட்ரேட்கள் மெதுவாக செரித்த ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.

இதய ஆரோக்கியம்

கேசரி பருப்பில் ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது.

இரும்புச்சத்துக்கள்

உங்கள் உடலில் அனீமியாவைத்தடுக்க, உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்க இரும்புச்சத்துக்கள் மிகவும் முக்கியமானது. கேசரி பருப்பில், இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது பெண்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு நல்லது.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கேசரி பருப்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்த போராட உதவுகிறது. இது சருமத்தில் வயோதிகத்தையும், சேதத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சருமத்தை சரிசெய்ய உதவுகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்கிறது.

நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துகிறது

கேசரி பருப்பில் உள்ள வைட்டமின்கள் மற்றம் மினரல்கள் குறிப்பாக வைட்டமின் சி மற்றும் சிங்க் சத்துக்கள், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்கள் உடலில் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது நோய்களுக்கு எதிராக வலுவான ஆற்றலை உருவாக்குகிறது.

எலும்பு ஆரோக்கியம்

மசூர் தாலில் கால்சியச் சத்துக்கள் நிறைய உள்ளது. இதில் உள்ள பாஸ்பரஸ் சத்தும் சேர்ந்துதான் வலுவான எலும்புகளை உருவாக்குகின்றன. எனவே உங்கள் எலும்பின் அடர்த்தியை அதிகரித்துக்கொள்ள உங்கள் உணவில் கட்டாயம் சேருங்கள். இது உங்களுக்கு எலும்புப்புரை நோய் எற்படும் ஆபத்தைக் குறைக்கும்.

சமைப்பது எளிது

கேசரி பருப்பில் எண்ணற்ற ஆரோக்கியம் அடங்கியுள்ளது மட்டுமின்றி, இதை உணவில் சேர்த்துக்கொள்வதும் எளிது. இதில் சூப், குழம்பு, சாலட் என எண்ணற்ற உணவு வகைகளை செய்தும் சாப்பிடலாம். இதை உங்கள் உணவில் பல வழிகளில் சேர்ப்பதுதான் உங்களுக்கு இந்தப்பருப்பின் நன்மைகளை முழுதாகப் பெற உதவுகிறது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி