Water : எந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா.. குடல் பிரச்சனை முதல் இத்தனை சிக்கலா!
Water : ஆயுர்வேதத்தின்படி தண்ணீர் குடிப்பதற்கு சில சிறப்பு விதிகள் உள்ளன. இந்த விதிகளின்படி சில உணவுகளை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால், ஏதாவது உடல்நலக் கோளாறுகள் வருவது நிச்சயம். அப்படியென்றால் என்னென்ன உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது என்று பாருங்கள்.
தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அவசியமானது. நாம் ஒவ்வொருவரும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயம். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். ஒரு நாளைக்கு குறைந்தது 2.7 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் தலைவலி, நீரிழப்பு உள்ளிட்ட உடல்நலம் தொடர்பான பிற பிரச்சனைகள் ஏற்படலாம். தண்ணீர் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், ஆயுர்வேதத்தின்படி தண்ணீர் குடிப்பதற்கு சில சிறப்பு விதிகள் உள்ளன. இந்த விதிகளின்படி சில பொருட்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். அப்படியானால் தண்ணீர் குடித்த பிறகு என்னென்ன உணவுகளை உண்ணக்கூடாது என்று பார்க்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். ஆயுர்வேதத்தின்படி, வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு குறைந்தது அரை மணி நேரமாவது தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். வாழைப்பழத்தில் நிறைய மாவுச்சத்து உள்ளது, இது தண்ணீரில் கலக்கப்பட்டால், எடை மற்றும் இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, கிவி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. இந்த சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம், வயிற்றில் உள்ள அமிலத்துடன் இணைந்து செரிமான செயல்பாட்டில் தலையிடலாம், இதனால் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும்.
பால்
பால் குடித்த பிறகு தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பை பாதிக்கிறது. ஏனெனில், பால் அருந்துவதற்கு முன்போ அல்லது அருந்திய உடனேயோ தண்ணீர் குடிப்பது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை பாதிக்கிறது. இதனால் வயிறு கனம், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
குளிர்பானங்கள்
ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் போன்ற குளிர் பானங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம். இந்த பொருட்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால், உடல் கூச்சம், வலி, பல்வலி போன்றவை ஏற்படும்.
எண்ணெய், நெய்
நெய்யில் தயாரிக்கப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், கடலைப்பருப்பு, வறுத்த உலர் பழங்கள் போன்றவற்றைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. இந்த உணவை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் இருமல் பிரச்சனை ஏற்படும். உண்மையில், அவை அனைத்திலும் அதிக அளவு எண்ணெய் உள்ளது, இது தண்ணீரை உட்கொள்ளும் போது உணவுக் குழாயில் கொழுப்பாக குவிகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
ஆரோக்கியம் தொடர்பாக தொடர்ந்து பல தகவல்களை அறிந்து கொள்ள எப்போதும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்