தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mushroom Pasta Recipe: ருசியான காளான் பாஸ்தா செய்முறை

Mushroom Pasta Recipe: ருசியான காளான் பாஸ்தா செய்முறை

I Jayachandran HT Tamil

Jan 28, 2023, 05:37 PM IST

குழந்தைகளுக்குப் பிடித்தமான, சத்தான காளான் பாஸ்தா செய்முறை பற்றி இங்கு காணலாம்.
குழந்தைகளுக்குப் பிடித்தமான, சத்தான காளான் பாஸ்தா செய்முறை பற்றி இங்கு காணலாம்.

குழந்தைகளுக்குப் பிடித்தமான, சத்தான காளான் பாஸ்தா செய்முறை பற்றி இங்கு காணலாம்.

குழந்தைகளுக்குப் பிடித்தமான, சத்தான காளான் பாஸ்தாவை அவர்கள் பள்ளி முடித்து வந்ததும் செய்து தரலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் அனைவருக்கும் இந்தப் பாஸ்தா பிடிக்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Myth about Masturbation : அடிக்கடி சுயஇன்பம் கொள்பவரா? எனில் இதப்படிங்க மொதல்ல! கட்டுக்கதைகளை தகருங்க!

Tomato - Coconut Chutney : தளதளன்னு தக்காளி தேங்காய் சட்னி! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் செய்வது எப்படி?

Idly Dosa Batter : வயிறு முதல் குடல் வரை உள்ள புண்கள் குணமாகவேண்டுமா? இட்லி மாவு இப்டி மட்டும் அரைங்க போதும்!

Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!

காளான் பாஸ்தா செய்யத் தேவையானவை :

பாஸ்தா – 150 கிராம்

வெங்காயம் – 1

பூண்டு – 5-6 பற்கள்

மொசரெல்லா சீஸ் – ¼ கப் (Mozzarella cheese)

கோதுமை / மைதா – 2 மேஜைக் கரண்டி

பால் – 1 கப்

காய்ந்த துளசி – 1 தேக்கரண்டி

காளான் – 200 கிராம்

காய்ந்த ஆர்கனோ – 1 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள் – தேவையான அளவு

பட்டர் – 2 மேஜைக் கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும

ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும்.

7-9 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.

ஒரு சாஸ் பானில் பட்டரை விட்டு சூடாக்கவும்.வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.

பின்பு வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். காளான் பாஸ்தா ரெசிபி ரெடி! பரிமாறவும்

டாபிக்ஸ்