தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆண் குழந்தைகளுக்கு மார்டன் பெயர்கள்! போராளி என்ற அர்தத்தை தரும்! வீரமகனுக்கான பெயர்களை தேர்ந்தெடுங்கள்!

ஆண் குழந்தைகளுக்கு மார்டன் பெயர்கள்! போராளி என்ற அர்தத்தை தரும்! வீரமகனுக்கான பெயர்களை தேர்ந்தெடுங்கள்!

Priyadarshini R HT Tamil

Nov 17, 2024, 12:14 PM IST

google News
போராளி என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளுக்கான மார்டன் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்குங்கள்.
போராளி என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளுக்கான மார்டன் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்குங்கள்.

போராளி என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளுக்கான மார்டன் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்குங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடுவது பெரும் சவாலான ஒன்று. இன்று மார்டன் பெயர்களைத் தான் அனைவரும் அதிகம் விரும்பி வைக்கிறார்கள். அதுமட்டுமின்றி பெயர்கள் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள். உங்கள் குட்டி குழந்தைக்கு, பெயரை தேர்ந்தெடுப்பது சவாலான ஒன்று. குறிப்பாக அந்தப்பெயர் தனித்துவமாக இருக்கவேண்டும். அதேநேரத்தில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் என்ன பெயரை தேர்வு செய்வது என்று யோசிக்கவேண்டாம். உங்கள் குழந்தைகளுக்கு வலுவானவர்கள் மற்றும் தைரியமானவர்கள் என்ற அர்த்தத்தில் வரும் பெயர்களை வைத்தால், அவர்களின் எதிர்காலம் வீரமிக்கதாக இருக்குமா? எனில் உங்களுக்கு இங்கு சில பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை போராளி என்ற அர்த்தம் கொண்ட மார்டன் பெயர்கள். இவற்றை தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு சிறக்க வழிவகுத்துக்கொடுங்கள்.

வீர்

வீர் என்பது மிக எளிமையான பெயர். சிறியதாகவும், அழைக்கவும் இனிமையானதாகவும் இருக்கும். வீர் என்றால் போராளி என்று பொருள். இந்த சிறிய பெயர் சக்தி வாய்ந்ததும் ஆகும்.

தேவான்ஷ்

தேவான்ஷ் என்றால் தெய்வீகத்தின் அங்கம் என்று பொருள். இது பலமானவர் என்பதையும் குறிக்கும். உங்கள் மகனுக்கு இந்தப்பெயரை சூட்டினால், அவர் வீரமிக்கவராகத் திகழவார்.

தேஜஸ்

தேஜஸ் என்றால் பளபளப்பு மற்றும் போர்குணம் மிக்கவர் என்று பொருள். இந்தப்பெயர் அவருக்கு நல்ல ஒரு வைப்பைக் கொடுக்கும். இதனால் இந்தப்பெயரைக் கொணடவர்களின் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.

அக்னேயா

அக்னேயா என்றால் நெருப்பின் மகன் என்று பொருள். போர்க்குணம் கொண்டவர் என்பதை இந்தப்பெயர் உறுதிப்படுத்துகிறது. இந்தப்பெயர் பழமையானதுதான். ஆனால் காலத்தால் அழியாத உணர்வைத் தரும்.

சமர்த்

சக்திவாய்ந்த மற்றும் எதையும் செய்யக்கூடிய என்று பொருள். சமர்த் என்றால் உட்புற பலம் என்று மற்றும் திறன் என்ற பொருளைத் தருகிறது.

விராஜ்

விராஜ் என்றால், அரச குடும்பத்து போராளி என்று பொருள், இந்தப்பெயரும் பழமையானது தான். ஆனால் எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்று ஆகும்.

ருத்ரா

ருத்ரா என்றால் சிவனின் கடுமையான தோற்றத்தைக் குறிக்கும். சிவன் கோவத்தில் ஆடும் நடனம் ருத்ர தாண்டவம். அந்தப்பெயரில் இருந்து வந்தது. இதற்கு சத்தம் அல்லது போராளி என்று பெயர்.

சமர்

சமர் என்பது சிறிய மற்றும் நவீன பெயர். இதற்கு போராளி மற்றும் போர்க்களம் என்று பொருள். இது சிறிய பெயர் என்றாலும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்.

ஏகலைவா

ஏகலைவன், என்பவர் புராண கதைகளில் வரும் பெரிய வில்வித்தை வீரர். இந்தப்பெயர் பலம் மற்றும் உறுதிப்பாடு என்பதைக் குறிக்கும்.

ஆதித்யா

ஆதித்யா என்றால், போராளிகளுடன் தொடர்புடைய பெயர். சூரியன் என்ற பொருள் உண்டு. இது இதமான மற்றும் வலுவான என்ற இரட்டை அர்த்தத்தைத் தரும் அழகிய பெயர்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி