Boy Baby Names : உங்கள் குழந்தைகள் வீராதிவீரர்களாக வேண்டுமா? இதோ அதற்கு ஏற்ற ராஜபுத்திர போராளிகளின் பெயர்கள்!-boy baby names want your kids to be heroes here are the names of the rajput fighters that are suitable for it - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : உங்கள் குழந்தைகள் வீராதிவீரர்களாக வேண்டுமா? இதோ அதற்கு ஏற்ற ராஜபுத்திர போராளிகளின் பெயர்கள்!

Boy Baby Names : உங்கள் குழந்தைகள் வீராதிவீரர்களாக வேண்டுமா? இதோ அதற்கு ஏற்ற ராஜபுத்திர போராளிகளின் பெயர்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 17, 2024 04:55 PM IST

Boy Baby Names : உங்கள் குழந்தைகள் வீராதிவீரர்களாக வேண்டுமா? இதோ அதற்கு ஏற்ற ராஜபுத்திர போராளிகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து சில பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Boy Baby Names : உங்கள் குழந்தைகள் வீராதிவீரர்களாக வேண்டுமா? இதோ அதற்கு ஏற்ற ராஜபுத்திர போராளிகளின் பெயர்கள்!
Boy Baby Names : உங்கள் குழந்தைகள் வீராதிவீரர்களாக வேண்டுமா? இதோ அதற்கு ஏற்ற ராஜபுத்திர போராளிகளின் பெயர்கள்!

அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.

ராஜபுத்திரர்களின் பெயர்களை தழுவிய பெயர்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து உங்கள் ஆண் குழந்தைகளை வீரனாக்குங்கள்.

ராஜபுத்திர வீரர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ஆண் குழந்தைகளின் பெயர்கள்

ராஜபுத்திர கதைகளில் அந்த கதாநாயகர்களின் போர்குணம் குறித்து அழகாக விவரிக்கப்பட்டிடருக்கும். அவர்களின் புகழ் இந்தியா முழுவதிலும் பிரபலமான ஒன்று. அவர்களின் வீரம் உலகறிந்த ஒன்று. ராஜபுத்திர வீரர்களின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்கள் குழந்தைகளுக்கு உகந்ததை தேர்ந்தெடுங்கள்.

பிரித்வி ராஜ்

பிரித்வி ராஜ் சவுகான் என்ற ராஜபுத்திரரிடம் இருந்து பெறப்பட்ட பெயர். பிரித்வி ராஜ் என்பவர் பழம்பெரும் ராஜபுத்திர மன்னர்களில் ஒருவர் ஆவார். இவரது வீரம் மற்றும் புகழுக்காக அறியப்படுபவர்.

ராணா

ராணா சங்கா என்ற மேவாரின் புகழ்பெற்ற அரசரின் பெயரில் இருந்து எடுக்கப்பட்ட பெயர். இந்த அரசர் போர்க்குணம் மிக்கவர்.

அமர்

அமர் சிங் ரத்தோர், இவரும் ராஜபுத்திரர்களில் புகழ்பெற்றவர். இவரும் இவரின் தைரியம் மற்றும் வீரம் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றது.

உதய்

உதய் சிங், 2. என்பவர்தான் உதய்பூர் என்ற நகரை உருவாக்கியவர். இவர் மஹாராணா பிரதாபின் தந்தை ஆவார். அவரின் பெயரில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப்பெயர், உங்கள் குழந்தைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

ஹம்மீர்

ஹம்மீர் என்பது ஹம்மீர் தேவ் சவுகான் என்ற பெயரில் இருந்து எடுக்கப்பட்டது. இவர் அந்நிய ஊடுவலை எதிர்த்து போராடிய அரசர்களுள் ஒருவர் ஆவார்.

பத்மினி

பத்மினி என்ற ராணியின் பெயரில் இருந்து எடுக்கப்பட்ட பெயர். இந்தப்பெயரை உங்கள் மகளுக்கு வைக்கலாம். ராணி பத்மினி, பத்மாவதி என்றும் அறியப்படுகிறார். இவரது அழகு மற்றும் அர்ப்பணிப்புக்காக இவர் கொண்டாடப்படுகிறார்.

மஹாராணா

மஹாராணா பிரதாப் என்ற பெயரில் இருந்து பெறப்பட்ட பெயர். மேவாரின் மன்னர் மற்றும் ராஜபுத்திரர்களில் புகழ்பெற்றவர் ஆவார்.

கும்ப்

ராணா கும்ப் என்பது மேவாரின் அரசரின் பெயரில் இருந்து பெறப்பட்ட பெயர். இவரது ராணுவப்படை பலம் நிறைந்தது. இவர் கட்டிட கலைக்கும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார்.

ஜெய்மால்

ஜெய்மால் ரத்தோர் என்பவரின் பெயரில் இருந்து பெறப்பட்ட பெயர். இவர் தைரியமான ராஜபுத்திர வீரர் ஆவார். இவர் முகலாய மன்னர் அக்பரை எதிர்த்து போரரிட்டு சித்தோர்காரை கைப்பற்றிய புகழ் கொண்வர்.

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.