Morning Quotes : காலையில் சூரிய ஒளியில் கொஞ்ச நேரம் செல்வதால் கிடைக்கும் பலன்கள்.. மன நலம் முதல் தூக்கமின்மை தீர்வு வரை
Sep 19, 2024, 09:43 AM IST
Morning Quotes : மெலடோனின் அளவை ஒழுங்குபடுத்துவது முதல் எண்டோர்பின் வெளியீட்டைத் தூண்டுவது வரை, காலையில் சிறிது சூரிய ஒளியைப் பெறுவதன் பல நன்மைகள் இங்கே உள்ளன.
Morning Quotes : இன்றைய மாறிவரும் சூழலில் தூக்கமின்மை என்பது மிக பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. வயது வித்தியாசமின்றி பலதரப்பினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சினையை போக்க உதவும் மிக எளிமையான வழியை இங்கு பார்க்கலாம். காலையில் சிறிது சூரிய ஒளியைப் பெற வெளியே செல்வது ஒரு சிறந்த வழக்கம். இதனால் பொதுவாக நமது காலைப் பொழுதுகள் புத்துணர்ச்சியுடன் தொடங்கும். இது நமது உடலுக்கும் ஆரோக்கியம் ஆகும். காலையில் நடைப்பயிற்சி அல்லது வொர்க்அவுட்டிற்கு - வெளியில் செல்வதற்கு நேரம் ஒதுக்கும்போது, ஒவ்பொரு நாளும் காலையில் சில மணிநேரங்களை நமது நல்வாழ்வுக்காக செலவழிக்கும் பழக்கம் ஏற்படும். அதுமட்டும் இல்லை தினமும் காலை சூரிய ஒளியில் நமது உடல் வெளிப்படுவதால் பல அற்புதமான நன்மைகள் உள்ளன. இதன் அசர வைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
தூக்கத்தை மேம்படுத்துகிறது:
நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு காலை சூரிய ஒளியைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. காலை சூரிய ஒளியில் உடலை வெளிப்படுத்துவது நாம் இரவில் நன்றாக தூங்க உதவுகிறது. சூரிய ஒளி உடலின் சர்க்காடியன் தாளத்தை சரிசெய்ய உதவுகிறது. இதனால் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி என்றே சொல்லலாம்.
வைட்டமின் டி உற்பத்தி செய்கிறது:
காலை சூரிய ஒளி வைட்டமின் D இன் சிறந்த மூலமாகும். உடலில் விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பது நல்லது. குறிப்பாக உடலில் வைட்டமின் D இன் குறைபாடு தூக்கமின்மை மற்றும் தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. காலையில் சிறிது சூரிய ஒளியைப் பெறுவது அதிக வைட்டமின் D ஐ உற்பத்தி செய்ய உதவுகிறது - இது நமது தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
செரோடோனின் அதிகரிக்கிறது:
செரோடோனின் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும், இது நமது நல்வாழ்வு, மகிழ்ச்சி மற்றும் நல்ல மனநிலையை அதிகரிக்கும். காலை சூரிய ஒளி உடலில் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நம்மை நாள் முழுவதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
மெலடோனின் கட்டுப்பாடு:
மெலடோனின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும், இது தூக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் உடலில் சூரிய ஒளி படும்போது அது மெலடோனின் உற்பத்தியை சீராக்க உதவுகிறது. எனவே, நம்மை சுறுசுறுப்பாக உணரவும், தூக்கத்திலிருந்து நம்மை உலுக்கவும் செய்கிறது.
மேம்பட்ட மனநிலை:
இயற்கையான சூரிய ஒளி வெளிப்பாடு எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுவதற்கு உதவுகிறது, இது மனநிலையை சீராக்க உதவுவதோடு மட்டும் இல்லாமல் நம்மை மகிழ்ச்சியாக உணர உதவுகிறது. இந்த நாளை நேர்மறையான குறிப்பில் தொடங்க இது மேலும் உதவுகிறது. காலையில் இயற்கையான சூரிய ஒளி வெளிப்பாடு நாள் முழுவதும் உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
ஆரோக்கியம் தொடர்பான சுவாரஸ்யமான பல தகவல்களை பெற தொடர்ந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!
டாபிக்ஸ்