பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறையை நீக்கும் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ளலாம்

freepik

By Muthu Vinayagam Kosalairaman
Sep 10, 2024

Hindustan Times
Tamil

இந்த வீட்டு வைத்தியம் பற்களில் இருந்து மஞ்சள் கறைகளை அகற்ற அல்லது குறைக்க உதவும்

பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்து பேஸ்ட் செய்து பற்களில் தடவவும். 1-2 நிமிடங்கள் மெதுவாக துலக்கினால் மஞ்சள் நிறம் குறைவதை கண்கூடாக பார்க்கலாம் 

டூத் பிரஷை கரி பொடியில் நனைத்து, இரண்டு நிமிடங்களுக்கு மெதுவாக துலக்கவும். பிறகு வாயை நன்றாக கழுவினால் பலன் பெறலாம்

ஒரு டேபிள்ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை பற்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் உங்கள் பற்களை துலக்கி தண்ணீர் விட்டு வாயை கொப்பளிக்கலாம்

ஸ்ட்ராபெர்ரிகளை பிசைந்து, பேக்கிங் சோடாவுடன் கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை பற்களில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து விட்டு கழுவவும்

பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இந்த பேஸ்ட்டை பற்களில் தடவி 1 நிமிடம் விட்டு கழுவவும்

நாள்தோறும் இரண்டு முறையாவது பேஸ்ட் கொண்டு பற்களை துலக்க வேண்டும். வாய் துர்நாற்றத்தைத் தடுக்க தினமும் மவுத்வாஷர் பயன்படுத்தலாம்

காபி, தேநீர், சிவப்பு ஒயின் மற்றும் பிற கறையை உண்டாக்கும் பானங்கள் அல்லது உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள். இவற்றை உட்கொண்ட பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கழுவவும்

வாய் மற்றும் பல் சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். கறை அதிகரித்தால், பல் மருத்துவரை அணுகுவது நல்லது

செவ்வாழை தரும் நன்மைகள்