தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  5 நிமிடத்தில் செய்து விடலாம்; சூப்பர் சுவையான ராகி உப்புமா! அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்புவார்கள்!

5 நிமிடத்தில் செய்து விடலாம்; சூப்பர் சுவையான ராகி உப்புமா! அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்புவார்கள்!

Priyadarshini R HT Tamil

Nov 05, 2024, 03:27 PM IST

google News
சூப்பர் சுவையான ராகி உப்புமாவை 5 நிமிடத்தில் செய்து விடலாம். உப்புமாவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சூப்பர் சுவையான ராகி உப்புமாவை 5 நிமிடத்தில் செய்து விடலாம். உப்புமாவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சூப்பர் சுவையான ராகி உப்புமாவை 5 நிமிடத்தில் செய்து விடலாம். உப்புமாவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உப்புமா என்றாலே சாப்பிட உட்கார்பவர்களுக்கு சலிப்புதான் ஏற்படும். அந்த அளவுக்கு உப்புமாவை வெறுப்பவர்கள் அதிகம் உள்ளனர். உப்புமா பொதுவாக ரவையில் செய்யப்படும் ஒரு உணவு ஆகும். கஞ்சி கெட்டியானால் எப்படியிருக்குமோ அதுதான் உப்புமா? இதனால்தான் அனைவரும் வெறுப்பார்கள். ஆனால் உப்புமாவை செய்யும் முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதும் அதை சூப்பர் சுவையான ஒன்றாக மாற்ற முடியும். இங்கு ராகி உப்புமா ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக உப்புமா ரவை, சேமியாவை வைத்து, காய்கறிகள் சேர்த்து அல்லது சேர்க்காமல் என இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது. இது இந்தியாவில் தோன்றி ஒரு உணவு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா, மஹாராஷ்ட்ரா, இலங்கை என பல்வேறு இடங்களில் பெருமளவில் புழக்கத்தில் உள்ள ஒரு உணவு ஆகும். பெரும்பாலும் உப்புமா காலை, மாலை டிஃபனுக்கு செய்யப்படுகிறது. அரிசி குருணையில் இருந்த தயாரிக்கப்படும் உப்புமா மிகுந்து சுவையானதாக இருக்கும்.

அதை நீங்கள் வெல்லம் மட்டுமே தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். எந்த வகை உப்புமாவுக்குமே வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை மிகவும் ஏற்றது. சிம்பிளாக செய்யும் உப்புமாவில் இஞ்சி, வெங்காயம், தக்காளி என சேர்க்கப்படுகிறது. விருந்துகளில் பரிமாறப்படும் உப்புமாக்களில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு பிரியாணி சுவையில் கொடுக்கப்படுகிறது.

கோதுமை ரவை அல்லது சம்பா ரவையில் தயாரிக்கப்படும் உப்புமா மிகுந்த சுவையானதாக இருக்கும். உப்புமாவில் கரம் மசாலா அல்லது சாம்பார் மசாலா சேர்த்தும் வித்யாசமான சுவையில் தயாரிக்கப்படுகிறது. இங்கு ராகி உப்புமா ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கடலை பருப்பு – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 1

அல்லது

வர மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – பொடியாக நறுக்கியது

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

ரவை – கால் கப்

ராகி மாவு – கால் கப்

நெய் – 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, முந்திரி சேர்த்து தாளிக்கவேண்டும். அதில் கறிவேப்பிலை, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். பச்சை மிளகாய் விரும்பாதவர்கள் வர மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம். ‘

அடுத்து தக்காளியை சேர்த்து நன்றாக அதையும் வதக்கவேண்டும். அடுத்து ரவையை சேர்த்து வறுக்கவேண்டும். அடுத்து ராகி மாவை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.

மற்றொரு அடுப்பில் 4 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, இந்த கலவையில் கொட்டி கிளறவேண்டும். அடுத்து நெய் சேர்த்துக்கிளறவேண்டும். இது வழக்கமான உப்புமா போல் இல்லாமல் சூப்பர் சுவையானதாக இருக்கும். 

இது ஊட்டச்த்துக்கள் நிறைந்ததும் ஆகும். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமாவே பிடிக்காது என்று அடம்பிடிப்பவர்கள் கூட வேண்டும், வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது. சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம்.

அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும். உங்கள் உடலுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி