Marundhu Kulambu Podi : மருந்து குழம்பு பொடி செய்வது எப்படி? மாதம் ஒருமுறை சாப்பிட உடல் நோய்கள் பறந்ததோடும்!
May 13, 2024, 11:02 AM IST
Marundhu Kulambu Podi : மருந்து குழம்பு பொடி செய்வது எப்படி? மாதம் ஒருமுறை சாப்பிட உடலில் நோய்கள் அனைத்தும் காணாமல் போகும். அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மருந்து குழம்பை மாதம் ஒருமுறை செய்து சாப்பிட்டால் கை-கால் வலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்றில் உள்ள பிரச்னைகள் என அனைத்தும் காணாமல் போகும்.
மருந்து குழம்பு பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்
சீரகம் – ஒரு ஸ்பூன்
சதகுப்பை – சிறிதளவு
ஓமம் – ஒரு ஸ்பூன்
கண்டந்திப்பிலி – சிறிதளவு
வால் மிளகு – சிறிதளவு
அரிசி திப்பிலி – சிறிதளவு
சித்தரத்தை – சிறிதளவு
சுக்கு – ஒரு இன்ச்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
இந்துப்பு – தேவையான அளவு
செய்முறை
சீரகம், சதகுப்பை, ஓமம், கண்டந்திப்பிலி, வால் மிளகு, அரிசி திப்பிலி, சித்தரத்தை, சுக்கு என அனைத்து பொருட்களையும் ஒரு இரும்பு கடாயில் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் சுக்கு போன்றவற்றை உரலில் சேர்த்து உடைத்துக்கொண்டு, பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது மஞ்சள் பொடி மற்றும் உப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துவைத்துக்கொண்டு 6 மாதம் வரை சேமிக்கலாம். வெளியிலே வைத்தாலும் கெடாது.
மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த மருந்து குழம்பை செய்து சாப்பிடவேண்டும்.
அப்போது உங்கள் உடலில் வலி, கை-கால் வலி, மூட்டு வலி, வயிற்றில் உள்ள பிரச்னைகள் என அனைத்தையும் போக்கும்.
இந்தப்பொடியை பயன்படுத்தி மருந்து குழம்பு செய்வது எப்படி?
இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடியவை. அதனால்தான் இது மருந்து குழம்பு பொடி என்று அழைக்கப்படுகிறது.
இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கக்கூடியவைதான்.
ஆர்கானிக் ஷாப்களிலும் கிடைக்கும். பொருட்களை வாங்கி சுத்தம் செய்து நன்றாக வெயிலில் காய வைத்து பின்னர் பயன்படுத்தவேண்டும்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மருத்துவகுணம் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோய்க்ளு குணமளிக்கக் கூடியது.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு
தக்காளி – 1
கத்தரிக்காய் – 2
பூண்டு – 12 பல்
கருவாடு – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
மருந்து பொடி – ஒரு ஸ்பூன்
புளிக்கரைசல் – ஒரு கப்
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரியவிடவேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக குழைய வேகவிடவேண்டும்.
பின்னர் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மருந்து பொடி என அனைத்தும் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் புளிக்கரைசலை அதில் ஊற்றி, கருவாட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்கினால், சுவையான மருந்து குழம்பு ரெடி. இதை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
இதை அசைவப்பிரியர் அல்லது கருவாட்டுக்குழம்பு பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், இதில் கருவாடு சேர்க்காமல் செய்து சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்