தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வந்துவிட்டது கிளாசிக் ஸ்கார்பியோ!

வந்துவிட்டது கிளாசிக் ஸ்கார்பியோ!

Aug 13, 2022, 05:10 PM IST

மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் ஸ்கார்பியோ என்ற காரை அறிமுகம் செய்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் ஸ்கார்பியோ என்ற காரை அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் ஸ்கார்பியோ என்ற காரை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் பிரபல கார் நிறுவனங்களில் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்கார்பியோ N மாடல் கார் முன்பதிவுகளில் உச்சத்தைத் தொட்டது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Myth about Masturbation : அடிக்கடி சுயஇன்பம் கொள்பவரா? எனில் இதப்படிங்க மொதல்ல! கட்டுக்கதைகளை தகருங்க!

Tomato - Coconut Chutney : தளதளன்னு தக்காளி தேங்காய் சட்னி! நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் செய்வது எப்படி?

Idly Dosa Batter : வயிறு முதல் குடல் வரை உள்ள புண்கள் குணமாகவேண்டுமா? இட்லி மாவு இப்டி மட்டும் அரைங்க போதும்!

Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!

அதனைத் தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் பழைய ஸ்கார்பியோ காரை கிளாசிக் ஸ்கார்பியோ என்று பெயரிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று இந்த கார் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த கார் இரண்டு வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது. 

அதாவது classic s, classic s11 என இரண்டு வேரியண்ட்களில் வெளியாக உள்ளது. பழைய காராக இருந்தாலும் புதுப்பிக்கப்பட்டு தற்போது புதிய லோகோ உடன் வெளியாக உள்ளது.

இதன் அம்சங்கள்

  • இந்த காரில் புதிய போக் லேம்ப், LED DRLS வசதி, 17 இன்ச் வீல், சைடு ரியர் டோர், LED ப்ரொஜெக்டர் ஹெட் லேம்ப் வசதி, கிளாசிக் பேட்ஜ் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதில் ஹைட் அடஜஸ்ட் டிரைவர் சீட், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ருமன்ட் கிளஸ்டர், கேப்டன் சீட், பிரீமியம் கேபின், 9 இன்ச் டச் ஸ்க்ரீன், டூயல் டன் டேஷ் போர்டு, லெதர் சீட், ஆடியோ கண்ட்ரோல் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதில் பாதுகாப்புக்காக 2 ஏர் பேக் வசதி ஸ்டாண்டர்ட், ABS, EBD, கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த காரில் 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 128BHP பவர், டார்க் 300 NM இழுவிசைக் கொடுக்கும்.