தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Liver Detox : கல்லீரை சுத்தம் செய்ய வேண்டுமா? காலை வெறும் வயிற்றில் ஒரு மணி நேரம் இந்த பானத்தை பருகவேண்டும்!

Liver Detox : கல்லீரை சுத்தம் செய்ய வேண்டுமா? காலை வெறும் வயிற்றில் ஒரு மணி நேரம் இந்த பானத்தை பருகவேண்டும்!

Priyadarshini R HT Tamil

Apr 29, 2024, 12:00 PM IST

google News
Liver Detox Drink : நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
Liver Detox Drink : நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

Liver Detox Drink : நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. 

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். ஆனால் இதயம், நுரையீரல், மூளை ஆகியவற்றைதான் மருத்துவ உலகம் முக்கியமான உறுப்பாக கூறும். 

ஆனால், கல்லீரல்தான் உண்மையில் நமது உடலின் முக்கிய பாகம். அது உடலில் பல்வேறு வேலைகளை செய்து நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.

இது உடலுக்கு கிடைக்கும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, ரத்தம் உறைதலை முறைப்படுத்தி, உடலுக்கு தேவையான பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. இது உடலின் வலது புறத்தில் வயிற்றுப்பகுதியில் உள்ளது.

நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

மல்லித்தழை – கைப்பிடியளவு

வெள்ளரி – 5 துண்டு

இஞ்சி – சிறிய துண்டு

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

செய்முறை

மல்லித்தழை, வெள்ளரி, இஞ்சி என அனைத்தும் சேர்த்து அரைத்து வடிகட்டி அதில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை ஒரு மணி நேரம் பருகவேண்டும். ஒரே நேரத்தில் பருகக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக ஒருமணி நேரம் வரை பருகவேண்டும்.

இது கல்லீரலை நன்றாக சுத்தம் செய்துவிடும். உடலில் உள்ள கழிவுகளையும் அகற்றிவிடும். இன்று நாம் சாப்பிடும் அனைத்து குப்பை உணவுகளின் கழிவும் இதன் மூலம் அகன்றுவிடும்.

கல்லீரலின் ஆரோக்கியத்தை பயன்படுத்த நீங்கள் மேலும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

போதை

போதை பொருட்களையும் கல்லீரல் கட்டாயம் வடிக்க வேண்டும். அதனால் நீண்ட காலம் போதை பழக்கத்தில் இருந்தால், அது கல்லீரலை சேதப்படுத்தும்.

மது

மதுவையும் கல்லீரல்தான் வடிகட்டவேண்டும். எனவே குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. அதிகம் எடுத்துக்கொண்டால் கல்லீரல் சேதமடையும்.

வழக்கமான உடற்பயிற்சி

உடலின் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்துக்கும், வழக்கமான உடற்பயிற்சி கட்டாயம் வேண்டும்.

பாதுகாப்பான உடலுறவு

பாலியல் நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லது.

நோய் தடுப்பூசி

பயணங்களின்போது போதிய தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மலேரியா, மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்டவை கல்லீரல் தொற்றுகளால் ஏற்படக்கூடியவை.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி