கலகலனெ சிரி கண்ணில் நீர் வர சிரி, நீங்கள் சிரித்து மகிழ இங்கே சில ஜோக்குகள்!

By Priyadarshini R
Dec 02, 2024

Hindustan Times
Tamil

கணவன் - என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா நண்பர் – அச்சச்சோ என்ன ஆச்சு? கணவர் – அவளே சாத்திட்டா

நண்பர் - கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா? மற்றவர் - முழுகாம இருக்கா!!!

டாக்டர் – கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு? பேஷன்ட் – போயும், போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு தோணுது டாக்டர்!

ஒருவர் - எம்பிளாய்மெண்ட் ஆபிசில பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தா எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கியே ஏன்? மற்றொருவர் – என்னோட அப்பாவுக்கு புதுப்பிக்கறணும், தாத்தாவுக்கு முதல் இன்டர்வ்யூ வந்திருக்கு!

நண்பர் 1 - வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது! நண்பர் 2 – அதனால? நண்பர் – 1 - வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்.

ஒருவர் - தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம். பொண்ணு எப்பிடி? மற்றொருவர் - நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார். இப்ப எப்படின்னு தெரியல!

ஓருவர் - ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்? மற்றொருவர் - ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில் கோடீஸ்வரனாகி விடுவார். கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸில் ஏழையாகிவிடுவார்.

குளிர் காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இனிப்புகளை தவிர்க்க வேண்டும். ஏன் தெரியுமா?