‘சிரித்து சிரித்து சிறையிலே சிக்குங்கள்’ வாய் விட்டும், மனசு விட்டும் சிரிக்க இதோ இந்த கடி ஜோக்குகள் போதுமா?
Dec 07, 2024, 10:08 AM IST
நீங்கள் சிரித்து மகிழ இதோ இந்த ஜோக்குகள் போதுமா?
ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.
சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்
சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கும் வகையிலும் நகைச்சுவை காட்சிகளை அமைப்பார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.
எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இன்று சிந்தனைக்கு அல்ல; வாய் விட்டு சிரிச்சுட்டு மட்டும் போங்க. இதோ மொக்க ஜோக்குகள்.
உங்களை கலகலவென சிரிக்க வைக்கும் மொக்க ஜோக்குகள் இதோ!
டாக்டர் ஊசி போடும்போது ஒருத்தன் தடுத்தான்? ஏன்?
ஏன்னா அது தடுப்பு ஊசியாம்? ஹாஹாஹா!
மைக்கில் ஜாக்சன் ஆடுவாரு, பாடுவாரு, ஆனால் உட்கார சொன்னால் உட்கார மட்டும் மாட்டாரு ஏன்?
ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது, அதான்! ஹாஹாஹா!
கல்யாண வீட்டுல ஒரு ஆள மட்டும் இழுத்து சாம்பார்ல போட்டாங்களாம்?
ஏன்னா அவருதான் அந்த ஊர்லயே பெரிய பருப்பாம்! ஹாஹாஹா!
ஒருத்தர் 15 மணி நேரமா சேர்லயே இருந்தாராம் ஏன்?
ஏன்னா அவர்தான் சேர்மனாம்.
மரமே இல்லாத காடு, அது என்ன காடு?
அதாங்க சிம் கார்டு.
இங்கிலீஸ்ல அம்மாவ மம்ன்னு சொன்னா? பெரியம்மாவையும், சின்னம்மாவையும் என்ன சொல்லுங்க?
பெரியம்மாவை மேக்ஸ்மம்னும், மினிமம்னும்னு சொல்வாங்க.
மாடு போல சின்னதா இருக்கும் ஆனா அது மாடு இல்ல அது என்ன?
அதாங்க கண்ணுகுட்டி
செல்போனுக்கும், மனிதனுக்கும் என்ன வித்யாசம்
மனிதனுக்கு கால் இல்லனா பேலன்ஸ் பண்ண முடியாது. செல்போனுக்கு பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது.
வீட்டு சாவி தொலைஞ்சு போச்சுன்னா யாருகிட்ட கேட்கணும்?
வேற யாருகிட்ட கேக்கணும் ‘கீ’தாகிட்டதான் கேட்கணும்.
ஒருத்தன் எக்ஸாம் ஹால் போயிட்டு திரும்பி வந்துட்டானாம் ஏன்?
ஏன்னா அவன் போனது ரிட்டர்ன் எக்ஸாமாம்.
இன்றைய மோட்டிவேஷன் லைன்ஸ்
இந்த இயற்கை நமது மகிழ்வுக்கும், ஆரோக்கியத்தை கொடுக்கிறது. ஆனால் அது அனைத்தையும் நம்மிடம் கொடுத்திருக்கிறது. அதை கோர்த்து மகிழ்ந்திருப்பது அல்லது சிதைப்பது இரண்டும் நம் கையில்தான் உள்ளது – டையானே மெக் லாரென்.