தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Karamani Poriyal : பச்சை காராமணியே பிடிக்காதா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க சமைத்தவுடனே தீர்ந்துவிடும்!

Karamani Poriyal : பச்சை காராமணியே பிடிக்காதா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க சமைத்தவுடனே தீர்ந்துவிடும்!

Priyadarshini R HT Tamil

Jul 25, 2024, 10:48 AM IST

google News
Karamani Poriyal : பச்சை காராமணியே பிடிக்காதவர் அதிகம் தான். ஆனால், இந்த மாதிரி செஞ்சு பாருங்க சமைத்தவுடனே காலியாகிவிடும்.
Karamani Poriyal : பச்சை காராமணியே பிடிக்காதவர் அதிகம் தான். ஆனால், இந்த மாதிரி செஞ்சு பாருங்க சமைத்தவுடனே காலியாகிவிடும்.

Karamani Poriyal : பச்சை காராமணியே பிடிக்காதவர் அதிகம் தான். ஆனால், இந்த மாதிரி செஞ்சு பாருங்க சமைத்தவுடனே காலியாகிவிடும்.

பச்சை காராமணியை சாப்பிடவே பிடிக்கவில்லையா? இதோ வறுத்த வேர்க்கடலை பொடி செய்து இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அள்ளும்.

தேவையான பொருட்கள்

பொடி செய்ய

வரமல்லி – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கடலை பருப்பு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வர மிளகாய் – 4

வேர்க்கடலை – ஒரு கைப்பிடியளவு

பொரியல் செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

காராமணி – கால் கிலோ

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எள்ளு – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் வர மல்லி, வெந்தயம், கடலை பருப்பு, உளுந்து, வெந்தயம், சீரகம், வர மிளகாய், எள்ளு, வேர்க்கடலை என அனைத்தும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக பொடித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் நீளவாக்கில் நறுக்கிய காராமணி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேகவிடவேண்டும். உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவேண்டும். 

காய் நன்றாக வெந்தவுடன், நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இந்த மாசலாப்பொடியை சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த மசாலாப் பொடியை அனைத்து வறுவலுக்கும் சேர்த்துக்கொள்ளலாம். சூப்பர் சுவையில் அசத்தும்.

காராமணி வேர்க்கடலை பொரியர் அசத்தும் சுவையில் தயாராகிவிட்டது. இதை சாம்பார், ரசம், தயிர் அல்லது வெரைட்டி சாதங்களுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

பொதுவாக காராமணியை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களும் இதுபோன்ற சுவையில் செய்தால், கட்டாயம் சாப்பிட்டு மகிழ்வார்கள்.

காராமணியின் நன்மைகள்

கலோரிகள் குறைவானது. 100 கிராம் காராமணியில் 47 கலோரிகள் உள்ளது. காராமணியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இது குடலை பாதுகாக்கிகறது. குடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகளை கொல்கிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு என்பது எல்டிஎல் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. குடலில் பித்த அமிலங்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. ஃபிரஷ் காராதணியில் ஃபோலோட்கள் உள்ளது. 100 கிராம் காராமணி உங்களின் அன்றாட ஃபோலேட் தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

இதில் உள்ள வைட்டமின் பி12 செல்கள் பிரிவதற்கு முக்கிய காரணியாகின்றன. கர்ப்ப காலத்தில் இந்த ஃபோலேட்களின் அளவு அதிகம் இருக்கவேண்டும். அது பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு கோளாறுகள் ஏற்படமால் தடுக்கிறது.

100 கிராம் காராமணியில் 31 சதவீதம் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது நீரில் கரையக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது உடலுக்கு தேவையான அளவு கிடைக்கும்போது, உடல் நோய் தொற்றுகளை எதிர்க்க தேவையான எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொள்கிறது. 

இது ரத்த நாளங்களில் நெகிழ்தன்மையை பராமரிக்கிறது. இது புற்றுநோய் ஏற்படாமல் சில பாதுகாப்பு கவசங்களை உடலுக்கு அளிக்கிறது.

வைட்டமின் ஏ, உள்ளதால், சருமம், இரவு நேர கண்பார்வை கூராக உதவுகிறது. இரும்பு, காப்பர், மாங்கனீஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் இதில் தேவையான அளவு உள்ளது. இதுவும் உடலுக்கு நன்மை தருகிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி