Benefits of Ridge Gourd : கூரான கண் பார்வை, மஞ்சள்காமாலையை போக்கும், பீர்க்கங்காயின் நன்மைகள் எத்தனை தெரியுமா?
Benefits of Ridge Gourd : கூரான கண் பார்வை, மஞ்சள்காமாலையை போக்கும், பீர்க்கங்காயின் நன்மைகள் எத்தனை என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பீர்க்கங்காயின் நன்மைகள்
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் ஃப்ரி ராடிக்கல்களை நீக்கி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்கி, சரும திசுக்களின் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
உங்கள் அன்றாட உணவில் பீர்க்கங்காய்களை சேர்த்துக்கொள்வது உங்கள் சரும செல்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் தொற்றுகள், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படாமல் தடுத்து, மிருதுவான, பளபளப்பான சருமத்தைக் கொடுக்கிறது.
உடலின் சூட்டை குறைக்கிறது
நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய் என்பதால், இது உடலில் உள்ள அதிகப்படியான சூட்டை போக்குகிறது. இதில் உள்ள பொட்டாசியம், சிங்க், காப்பர், செலினியம் போன்ற மினரல்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இது உடலில் உள்ள அசிடிட்டியை சமப்படுத்துகிறது. தேவையான ஆல்கலைன் சூழலை உருவாக்குகிறது. உடலில் எலக்ட்ரோலைட்களை சேமிக்க உதவுகிறது.
வீக்கத்தை குறைக்க உதவுகிறது
பீர்க்கங்காயின் இலைகள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. பீர்க்க இலைகளை வீக்கம் உள்ள இடத்தில் அரைத்து தடவினால் பலன்தரும். உள்ளுக்குள் இருக்கும் வீக்கத்தையும் குறைக்கும். மேலும், இருமலைப்போக்கி, சுவாச மண்டலத்தில் உள்ள வீக்கங்களையும் சரிசெய்யும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்
பீர்க்கங்காய் கலோரிகள் குறைந்த ஒன்றாகும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. பீர்க்கங்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது. இதன் ஹைப்போகிளைசெமின் திறன்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
கண்பார்வையை கூராக்க உதவுகிறது
பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வயோதிகத்திலும் கண் பார்வைத்திறனை நன்றாக வைத்திருக்கச் செய்கிறது. கண்ணில் வேறு குறைபாடுகள், மங்கலான பார்வை ஆகிய அனைத்தையும் குணப்படுத்துகிறது.
மலச்சிக்கலைப் போக்குகிறது
பீர்க்கங்காயில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் செல்லுலோஸ் அதிகம் உள்ளது. அது இயற்கையான நார்ச்சத்துக்கள் ஆகும். இதனால், பீர்க்கங்காயை சாப்பிடும்போது மலச்சிக்கல் நீங்குகிறது. இது உங்கள் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை முறைப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்துக்களால் உங்கள் உடல் இதை உறிஞ்சுவதற்கு தாமதம் ஆகிறது. இதனால், உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இதில் கலோரிகளும் குறைவு. மேலும், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த தேர்வாகவும் உள்ளது. பொதுவாகவே நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் உங்களுக்கு உடல் எடையை குறைப்பதில் உதவுகிறது.
அனீமியாவைத் தடுக்கிறது
பீர்க்கங்காயில் எண்ணற்ற இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதனால் இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது அனீமியாவைப் போக்குகிறது. அனீமியா இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் ஆகும். பீர்க்கங்காயில் அதிகளவில் வைட்டமின் பி6 உள்ளது.
இது ரத்த சிவப்பணுக்கள் சீரான முறையில் இயங்கவும், அவற்றின் உற்பத்திக்கும் இரும்பு சத்துடன் சேர்த்து பலன் தருகிறது. இது உடலில் அனைத்து பாகங்களுக்கும் சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. இதனால் வலி மற்றும் சோர்வு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
கல்லீரல் இயக்கத்தை பாதுகாக்கிறது
பீர்க்கங்காய் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கழிவு மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் அசுத்தங்களையும், செரிக்காத உணவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. இது கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் பித்தப்பை நன்றாக இயங்கவும் உதவுகிறது. கல்லீரலில் இருந்து சுரக்கும் ஒரு திரவம்தான் பித்தம், அது கொழுப்பை உடைக்க உதவுகிறது. கல்லீரலில் ஏற்படும் மஞ்சள்காமாலை உள்ளிட்ட மற்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கண், கல்லீரல், வயிறு, சிறுநீரகத்தொற்றுங்கள் என அனைத்தும் ஏற்படுவதற்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் குறைவது காரணமாகிறது. பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், ரிபோஃப்ளாவின், தியாமின் மற்றும் சிங்க் சத்துக்கள் வீக்கத்தை குறைத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பை வழங்குகிறது.
அல்சரை குணப்படுத்துகிறது
பீர்க்கங்காய் அசிடிட்டியை குணப்படுத்தி, அல்சர் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளைப் போக்குகிறது. குளுமைத்திறன், வாயில் ஏற்படும் அல்சரையும் போக்கும். சிறுநீர் கழிக்கும்போது வயிற்றில் ஏற்படும் எரிச்சலையும் நீக்குகிறது.
இதய ஆரோக்கியம்
இதயம் சீராக இயங்குவதற்கு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் உதவுகிறது. இந்த மினரல்கள் பீர்க்கங்காயில் அதிகம் உள்ளது. வீக்கம் மற்றும் கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய நோய்களை பீர்க்கங்காய் தடுக்கிறது.
டாபிக்ஸ்