Karamani Pulao: குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு ஈஷியா ரெடி பண்ண இதோ காராமணி புலாவ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Karamani Pulao: குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு ஈஷியா ரெடி பண்ண இதோ காராமணி புலாவ்!

Karamani Pulao: குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு ஈஷியா ரெடி பண்ண இதோ காராமணி புலாவ்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 16, 2023 08:09 AM IST

உதிரி உதிரியான காராமணி புலாவ். காலையில் எளிதாக செய்து விட முடியும். ருசியும் அருமையாக வரும். உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இருக்கும்.

காராமணி புலாவ்
காராமணி புலாவ்

தேவையான பொருட்கள்

காராமணி

சோம்பு

பட்டை

கிராம்பு

அண்ணாச்சிபூ

ஜாதி பத்ரி

ஏலக்காய்

இஞ்சி

பூண்டு

கறிவேப்பிலை

புதினா

மல்லி இலை

வெங்காயம்

தக்காளி

பச்சை மிளகாய்

மிளகாய் தூள்

மஞ்சள் தூள்

பிரியாணி பவுடர்

தயிர்

நெய்

எண்ணெய்

செய்முறை

காராமணியை இரவில் குறைந்தது 6 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் கொஞ்சமாக உப்பு சேர்த்து இரண்டு விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரில் 4 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு துண்டு பட்டை, 3 கிராம்பு, ஒரு ஜாதி பத்ரி, ஒரு அண்ணாச்சி பூ, 3 ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் அதில் வெட்டி வைத்த 2 வெங்காயம் 3 பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். 

ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் போது அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாடை போனவுடன் ஒரு பெரிய தக்காளியை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். தக்காளி நன்றாக வதங்கும் போது அதில் ஒரு கால் கப் தயிர் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் பிரியாணி பவுடர் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் பொடியை சேர்த்து கலந்து விட வேண்டும். 

அரை ஸ்பூன் மல்லி பவுடர் சேர்த்து நன்றாக கிளறிய பின்னர் ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்த காராமணியை சேர்த்து அதில் ஊற வைத்து வடி கட்டிய ஒரு கப் அரிசியை கலந்து விட வேண்டும். 

கடைசியாக ஒரு கைபிடி மல்லி இலையை சேர்த்து குக்கரை ஸ்மில் வைத்து ஒரு விசில் விட வேண்டும். பாசுமதி அரிசி என்றால் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைத்து விடலாம். 

அவ்வளவு தான் உதிரி உதிரியான காராமணி புலாவ் ரெடி. காலையில் எளிதாக செய்து விட முடியும். ருசியும் அருமையாக வரும். உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இருக்கும்

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.