தனுசு ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: கஷ்டங்கள் எல்லாம் தூள் தூளா பறக்கப்போகுது.. பணம் கொட்டப் போகுதாம்.. வாங்க பாக்கலாம்
New Year 2025: இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு தனுசு ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
New year 2025: இந்த 2025 எதிர்பார்த்து காத்திருபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த ஆண்டு பெரிய கிரகங்களாக கருதப்படும். குரு, சனி, ராகு, கேது இவர்கள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு தனுசு ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
தனுசு ராசி பொது பலன்கள்
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு நல்ல யோகமான ஆண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கக்கூடும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிதாக வீடு வாங்கும் யோகம் கிடைக்கக்கூடும்.
தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் பொருளுக்கு கிடைக்கும். பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். ஜூலை மாதத்திற்கு பிறகு உங்களுக்கு வாகன யோகம் உள்ளது. திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். வாழ்க்கைத் துணைவியார் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பொருளாதார நிலையிலும் உங்களுக்கு முன்னேற்றம் காணப்படும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வேலை மற்றும் தொழில்
இந்த 2025 புத்தாண்டு தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொதுப்பணித்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
அரசு வேலைகள் பணியாற்றுபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கொடுக்கப்படும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
தொழில் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் புதிய துறையில் இருப்பவர்களுக்கு தனலாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு காதல் வாழ்க்கையில் சாதகமான பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ஜனவரி மாதத்தில் இருந்து சில தம்பதிகளுக்கு இடையே மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விட்டுக் கொடுத்து சென்றால் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண உறவில் அப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆன்மீகப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மார்ச் மாதத்தில் திருமணம் ஆகாத ஆண்களுக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
புதிய தம்பதிகள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காதல் வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சுற்றுலா பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமண உறவில் இருக்கக்கூடிய வயதான தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையில்லாத பேச்சுகளை தவிர்த்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.