Preventions For Pimples: முகப்பருவை முற்றிலுமாக தவிர்க்கும் முக்கிய வழிமுறைகள்! தெரிஞ்சுக்க இதய படிங்க!
Sep 26, 2024, 04:26 PM IST
Preventions For Pimples: முகத்தில் தோன்றும் பல தொல்லைகளில் முதன்மையானது முகப்பரு, இது முகத்தில் தோன்றினால் தெளிவாக தெரியும். இக்காரணத்தினாலேயே பலர் முகப்பருவை போக்க பல வழிமுறைகளை பின்பற்றுவர்.
அதிகரித்து வரும் மாசபாடு, உணவு, மேக்கப் பொருட்கள் என பல காரணிகளால் முகத்தில் பல வித குறைபாடுகள் ஏற்படுகின்றன. முகத்தில் தோன்றும் பல தொல்லைகளில் முதன்மையானது முகப்பரு, இது முகத்தில் தோன்றினால் தெளிவாக தெரியும். இக்காரணத்தினாலேயே பலர் முகப்பருவை போக்க பல வழிமுறைகளை பின்பற்றுவர். முகத்தில் முகப்பரு தோன்றுவதற்கு முக்கிய காரணியாக எண்ணெய் பசை உள்ளது. இதனை குறைப்பதனால் முகப்பருவையும் குறைக்க முடியும்.
முகப்பருக்கள் ஹார்மோன் மாற்றங்களினாலும் உருவாகின்றன. உடலின் ஹார்மோன் மாற்றத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. மாற்றாக முகத்தை சுத்தமாக வைத்திருப்பது முகப்பருவால் ஏற்படும் வேறு பிரச்சனைகளை குறைக்க முடியும்.
முகம் கழுவுதல்
ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை, குறிப்பாக வியர்வை வெளியேறிய பிறகு, உங்கள் முகத்தை மென்மையான, சிராய்ப்பு இல்லாத க்ளென்சர் மூலம் கழுவவும். க்ளென்சரைப் பயன்படுத்த உங்கள் விரல் நுனிகளைப் பயன்படுத்தலாம், மேலும் உங்கள் சருமத்தை சுத்தமான துண்டு உபயோகப்படுத்தி மட்டும் துடைக்க வேண்டும்.
முகத்தை தொடுதல்
உங்கள் முகத்தை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இதனால் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் உங்கள் கை வழியாக முகத்தினை அடையும். அவை முகத்தில் உள்ள துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்தும். இதன் வாயிலாக முகத்தில் அடிக்கடி ஏற்படும் பருக்களை முன் கூட்டியே தடுக்க முடியும். முகத்தில் ஏதேனும் பரு, வடுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சூரிய ஒளி
முகத்தில் ஏதேனும் பரு அல்லது கொப்பளம் இருக்கும் பட்சத்தில் சூரிய ஒளியில் இருந்து முகத்தை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் சூரிய ஒளியில் வீக்கம் மற்றும் சிவந்து போதல் அதிகரிக்கும், இது ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு வழிவகுக்கும். புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் போட்டு பாதுகாக்கலாம்.
ஆரோக்கியமான உணவு
உங்கள் சருமத்தைப் பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைப் பெற பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவும். கொழுப்பு நிறைந்த மீன், ஆளி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் மூலங்களையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேக்கப் பொருட்கள்
மென்மையான, ஆல்கஹால் இல்லாத தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துங்கள், மேலும் உங்கள் சருமத்தை எரிச்சலூட்டும் அஸ்ட்ரிஜென்ட்கள், டோனர்கள் மற்றும் எக்ஸ்ஃபோலியண்ட்ஸ் போன்ற பொருட்களைத் தவிர்க்கவும்.
மாய்ஸ்சரைசர்கள்
உடலில் தெப்பதற்கு தயாரிக்கப்படும் லோஷன்கள் அடர்த்தியானவை. இவை உங்கள் முகத்தில் உள்ள நுண்ணிய துளைகளை அடைத்துவிடும். காமெடோஜெனிக் அல்லாத மற்றும் வாசனை இல்லாத மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்