Girl Baby Names : ‘மலர் போன்ற மென்மையானவர்’ என்ற அர்த்தத்தை தரும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இதோ!-girl baby names here are baby girl names that mean soft as a flower - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : ‘மலர் போன்ற மென்மையானவர்’ என்ற அர்த்தத்தை தரும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இதோ!

Girl Baby Names : ‘மலர் போன்ற மென்மையானவர்’ என்ற அர்த்தத்தை தரும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இதோ!

Priyadarshini R HT Tamil
Aug 10, 2024 03:21 PM IST

Girl Baby Names : ‘மலர் போன்ற மென்மையானவர்’ என்ற அர்த்தத்தை தரும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உங்கள் வீட்டு இளைய ராணிகளுக்கு சூட்டி மகிழுங்கள்.

Girl Baby Names : ‘மலர் போன்ற மென்மையானவர்’ என்ற அர்த்தத்தை தரும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இதோ!
Girl Baby Names : ‘மலர் போன்ற மென்மையானவர்’ என்ற அர்த்தத்தை தரும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இதோ!

மலர்களை மையப்படுத்தி வரும் பெண் குழந்தைகளின் பெயர்கள்

மலர்கள் என்றாலே அழகு, கருணை மற்றும் தூய்மை என்று பொருள். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள், பெண் குழந்தைகளுக்கு பொதுவாக மலர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கம். பெண் குழந்தைகளுக்கும், இயற்கைக்கும் நிறைய தொடர்புடையதாக கருதுகிறார்கள். அதனால்தான் பெண் குழந்தைகளுக்கு மலர்களின் பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள்.

மலரிடம் இருந்த பெறப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்கள்

சின்னா

சின்னா என்பது மலரின் பெயர். இதன் மணமும், அழகும் பார்ப்பவர் கண்களை கவர்வதைப் போலும், முகரும்போது வாசம் உங்கள் மனதை மயக்குவதாகவும் இருக்கும். இந்த சின்னா மலர்கள் மாலைகளுக்கு பயன்படுத்தப்படுபவை. ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் கடவுளுக்கு சாற்றக்கூடியவையாகும்.

நர்கிஸ்

நர்கிஸ் என்றால், கருணை மிகுந்த மற்றும் நேர்த்தியான என்பது இதன் பொருள் ஆகும். அழகையும், வசிகரத்தையும் இந்தப் பெயர் குறிப்பிடுகிறது. இது மிகவும் மிருதுவான மற்றும் அதிக நுட்பமான மலரைக் குறிக்கிறது.

மல்லிகா

மல்லிகா என்பது மல்லிகை மலரில் இருந்து பெறப்பட்ட பெயர். ஜாஸ்மின் என்ற ஆங்கிலப்பெயரும் பெண்களுக்கு சூட்டப்படுகிறது. மல்லிகா என்பதை தமிழிழும், ஜாஸ்மின் என்பதை ஆங்கிலத்திலும் பெண் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்கிறார்கள். இது தூய்மை மற்றும் எளிமை என்பதை குறிப்பிடுகிறது.

பாரிஜாத்

பாரிஜாதம் என்ற இரவில் மலரும் மல்லிகைப்பூவின் பெயர். இந்த பூ இரவில்தான் மலர்ந்து மணம் பரப்பும். பக்தி மற்றும் நித்திய அன்பு என்பது இதன் அர்த்தமாகும். இந்தப்பெயரும் தமிழில் பெண் குழந்தைகளுக்கு பரவலாக வைக்கப்படும் பெயர் ஆகும்.

கமலா

கமலம் என்றால் தாமரை மலர், இது தூய்மை மற்றும் தெய்வீக அழகை காட்டும் பெயர் ஆகும். இது இந்த தெய்வங்களுடன் தொடர்புடையது. லட்சுமி, சரஸ்வதி போன்ற தெய்ங்களுக்கு வைத்து பூஜிக்கப்படும் பூ தாமரை. கமலம் அல்லது தாமரை என இரு பெயர்களும் தமிழில் பெண் குழந்தைகளுக்கு பரவலாகப் பெயர் வைக்கப்படுகிறது.

ஜீஹி

இது மல்லிகை மலரில் இருந்து பெறப்பட்ட மற்றொரு பெயர் ஆகும். மல்லிகை மலர் மணம் நிறைந்தது. இனிமையான மணத்தை பரப்பும் மல்லிகை என்ற பெயரும் மல்லிகை மலருக்கு உண்டு. இந்த பெயரை வைத்திருப்பவர் இனிமையான குணங்களை கொண்டிருப்பார்கள் என்று பொருள்.

மதச்சடங்குகளுக்கு இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது. மதவிழாக்கள், கோயில் திருவிழாக்கள் என முக்கியமான இடத்தை மல்லிகை மலர் பெற்றுள்ளது. மேலும் இந்த மலர் பெண்கள் தலையில் சூடிக்கொள்ளும் மலர் ஆகும்.

கேட்டகி

கேட்டகி என்றால், நல்ல மணத்தை பரப்பும் மலர் என்று பொருள். இது இந்திய பாரம்பரிய திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் மலர் ஆகும். இந்தப் பெயரை உங்கள் பெண் குழந்தைக்கு சூட்டினால் தனித்தன்மையானதாக இருக்கும்.

பத்மா

பத்மா என்பதும் தாமரை மலரின் இன்னொரு பெயர்தான். இது புனித காரியங்களுக்கு பயன்படுத்தப்படும் மலர். இது தூய்மை, பிரகாசம் மற்றும் மறுபிறப்பு என்பதை குறிப்பிடுவதாக உள்ளது. இந்தப் பெயரை கொண்ட பெண்கள் சிறப்பான நற்குணங்களைப் பெற்றிருப்பார்கள்.

ரஜானி

ரஜானி என்றால், இரவில் மலரும் மல்லிகையின் பெயர். இந்த மலர் சென்ட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது அழகு மற்றும் இருளில் ஒளிரும் தன்மைகொண்டது என்ற இரண்டையும் குறிப்பிடுவதாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.