Turmeric Milk Benefits : உறங்கச் செல்லும் முன் இந்தப்பாலை மட்டும் பருகுங்கள்! உடலுக்கு எத்தனை நன்மைகள் என பாருங்கள்!
Turmeric Milk Benefits : உறங்கச் செல்லும் முன் இந்தப்பாலை மட்டும் பருகுங்கள். உடலுக்கு எத்தனை நன்மைகள் கொடுக்கிறது என்று பாருங்கள்.
தினமும் உறங்கச்செல்லும் முன் இரவில் மஞ்சள் தூள் கலந்த பாலை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். மஞ்சள் கலந்த பாலை பருகுவது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். இந்தியாவில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக இந்த மஞ்சள் கலந்த பால் பருகப்படுகிறது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவை ஆண்டாண்டுகளாக போற்றப்படுகின்றன. இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பருகவேண்டும். இந்த பொன்னிற பானம், படுக்கைக்குச் செல்லும் முன் பருகப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் நலனுக்கும் சிறந்தது. எனவே உங்கள் இரவு உணவுக்குப்பின் மஞ்சள் கலந்த இளஞ்சூடான பாலை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உறக்கம்
மஞ்சள் தூளில் குர்குமின் உள்ளது, இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் உட்பொருள் ஆகும். இதை நீங்கள் இளஞ்சூடான பாலில் கலந்து பருகும்போது, அதில் உள்ள உறக்கத்தை வரவைக்கும் டிரிப்டோஃபான் என்ற அமினோ அமிலங்கள் உங்களின் உறக்கத்தை மேம்படுத்துகின்றன. மஞ்சள் தூள் கலந்த பால் உங்களை உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. இது உங்களின் ஆழ்ந்த உறக்கத்துக்கு அழைத்துச் செல்ல ஏதுவானது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
மஞ்சள் தூள் வீக்கத்துக்கு எதிரான நற்குணங்கள் கொண்டது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. எனவே நீங்கள் அன்றாடம் மஞ்சள் கலந்த பாலை பருகுவது உங்கள் உடலை தொற்றகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுகள், சளி, இருமல் மற்றும் காய்ச்சலைப் போக்க ஏற்றது.
வீக்கத்தை குறைக்கிறது
மஞ்சள்தூளில் உள்ள குர்குமின், வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது. மஞ்சள் பாலை ஒரு சிறந்த வீக்கத்தை குறைக்கும் தீர்வாக மாற்றுகிறது. இது உங்கள் உடலில் உள்ள வீக்கங்பளை குறைக்க உதவுகிறது. குறிப்பாக இந்தப்பால் ஆர்த்ரிட்டிஸ் மற்றும் மூட்டுவலிகளால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் உதவிகரமானது. இது உங்களை ஆற்றுகிறது மற்றும் உங்கள் உடலில் உள்ள அசவுகர்யங்களைப் போக்குகிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது
உறங்கச் செல்லும் முன் மஞ்சள் தூள் கலந்த பாலை பருகுவது, உங்களின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசம், செரிமானமின்மை மற்றும் வாயு போன்ற அறிகுறைகளைக் குறைக்கிறது. மஞ்சள் தூள் உங்கள் உடலில் பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் உக்ஙள் உணவு எளிதாக உடைக்கப்பட்டு, செரிமான கோளாறுகள் நீக்கப்படுகின்றன.
சரும ஆரோக்கியம்
மஞ்சள் தூள் சருமத்தை பளபளப்பாக்கும் தன்மைகொண்டது. இதனால்தான் நம் முன்னோர்கள் உடலில் மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் தூள் முகப்பருக்களை சுத்தம் செய்யும், உடலின் இயற்கை பொலியை அதிகரிக்கும். உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க மஞ்சள் கலந்த பால் மிகவும் நல்லது. அது உங்கள் சருமப்பொலிவுக்கும், சருமம் பளபளப்புக்கும் உதவுகிறது.
கல்லீரலை சுத்தம் செய்கிறது
மஞ்சள் தூள் கலந்த பால் உங்கள் உடலை இயற்கை முறையில் சுத்திகரிக்கிறது.இது உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. எனவே உறங்கச் செல்லும் முன் மஞ்சள் தூள் கலந்த பாலை பருகும்போது, அது உங்கள் கல்லீரல் நன்றாக வேலை செய்ய தேவையான ஆதரவை வழங்குகிறது. எனவே நீங்கள் உறங்கும்போது, மிகவும் ஆற்றல் வாய்ந்த கழிவு நீக்கத்தை இந்த மஞ்சள் தூள் கலந்த பால் செய்யும்.
சுவாச பிரச்னைகளை எதிர்த்து போராடுகிறது
மஞ்சள் தூள் கலந்த பால், சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த வீட்டு மருந்து ஆகும். இது மற்ற சுவாசக் கோளாறுகளையும் சரிசெய்கிறது. மஞ்சளில் உள்ள வீக்கம் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள், மஞ்சளை சளியால் ஏற்படும் மூக்கடைப்பை சரிசெய்ய உதவுகிறது. சுவாசப் பாதையில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. தொண்டை புண்களை சரிசெய்கிறது. சுவாசத்தை எளிதாக்குகிறது.
உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது
மஞ்சள் தூள் கலந்த பாலை இரவு பருகும்போது, அது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. மஞ்சள் தூளின் வீக்கத்துக்கு எதிரான குணங்கள். உடலின் கொழுப்பு சேரும் செயல்முறையை முறைப்படுத்துகிறது. இதனால் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்