ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வெஜிடபள் தம் பிரியாணி! ஈஸியா செய்யலாம்! இதோ பக்கா ரெசிபி!
Nov 17, 2024, 05:16 PM IST
பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் செய்வது போல வெஜிடபுள் தம் பிரியாணி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டது. சில வீடுகளில் மாலை போடுவது வழக்கம். சிலர் மாலை போடாமல் அசைவம் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தி விடுவார்கள். அந்த வரிசையில் வீட்டில் சுவையான சைவ உணவுகள் செய்து தர வேண்டும். அதற்காக தான் இந்த ரெசிபி உள்ளது. பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் செய்வது போல வெஜிடபுள் தம் பிரியாணி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கப் பாசுமதி அரிசி
2 கேரட்
8 பீன்ஸ்
1 உருளைக்கிழங்கு
கால் கப் பட்டாணி
அரை காலிஃப்ளவர்
2 தக்காளி
2 பெரிய வெங்காயம்
1 பச்சை மிளகாய்
8 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
அரை கப் தயிர்
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
1டீஸ்பூன்மல்லி தூள்
2 டீஸ்பூன் பிரியாணி மசாலா
15டீஸ்பூன் குங்குமப்பூ பால்
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு புதினா
தேவையான அளவு கொத்தமல்லி
தேவையான அளவு நெய்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்து எடுத்து வேக வைக்க வேண்டும். அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானது அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி அதனை எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், ஒரு மேஜைகரண்டி அளவு பிரியாணி மசாலா, மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, மற்றும் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போடவும். அடுத்து அதில் வறுத்த வெங்காயத்திலிருந்து சிறிதளவு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஊற விடவும்.
பின்னர் சுடவைத்த பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். சூடானதும் அதில் ஊற வைத்திருக்கும் காய்கறி கலவைகளை பக்குவமாக போட்டு அதை நன்கு கிளறி விட்டு வதக்கவும். பின்னர் அதனை மூடி நன்கு வேக விடவும். இப்பொழுது அந்த பாத்திரத்தில் இருக்கும் காய்கறி கலவையை நன்கு சமம் செய்து வேகவைத்த பாசுமதி அரிசியில் இருந்து பாதியை எடுத்து அதில் போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் சாதம் உடைந்து விடாமல் பக்குவமாக சமம் செய்யவும். பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு நெய், குங்குமப்பூ பாலில் இருந்து பாதி, ஒரு கை அளவு வறுத்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி, மற்றும் ஒரு சிட்டிகை அளவு பிரியாணி மசாலாவை தூவி விடவும். அதைத்தொடர்ந்து அதன் மேலே காய்கறி கலவைகளை சேர்த்து அதை நன்கு பரப்பி விடவும். அடுத்து அதன் மேலே மீதம் உள்ள பாசுமதி அரிசியை போட்டு மீண்டும் ஒரு அடுக்கிற்கு முன்பு போட்ட எல்லாவற்றையும் போட வேண்டும். பின்பு இதனை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுவையான பிரியாணி தயார்.
டாபிக்ஸ்