பிரியாணி பிரியர்களே இந்த ஒரு மசாலாப் பொடி மட்டும் போதும்! தினம் தினம் சாப்பிடலாம்!
பிரியாணி மசாலாப்பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிரியாணி, இது தெற்காசியாவின் புகழ்பெற்ற உணவாகும். தற்போது கணக்கெடுப்பு நடத்தினாலும் பிரியாணி பிடிக்காதவர்களே நாட்டில் இல்லை எனும் அளவுக்கு பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை இருக்கும். அந்தளவுக்கு பிரபலமான உணவு. பிரியாணியை கறி, மீன், சிக்கன், பன்றிக்கறி, இறால் என அனைத்து வகைகளிலும் செய்யலாம். அதுவே சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு பன்னீர், காய்கறிகள், காளான், முட்டை என வகைகள் உள்ளது. இது மட்டுமின்றி பச்சை பட்டாணி, டபுள் பீன்ஸ், பட்டர் பீன்ஸ், சோயாவைப் பயன்படுத்தியும் பிரியாணி தயாரிக்க முடியும். பீட்ரூட் பிரியாணி, உருளைக்கிழங்கு பிரியாணியுடம் செய்யலாம். எனவே பிரியாணி சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டால் அசைவம் அல்லது சைவம் என இரண்டு வகைகளிலும் செய்து சாப்பிடலாம். தெற்காசியாவின் மிக பிரபலமான உணவான பிரியாணி உள்ளது. இது முஸ்லிம்களுடன் தொடர்புடைய உணவாக இருப்பதால், பாய் வீட்டு பிரியாணிக்கு மவுசு அதிகம். இந்தியாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பிரியாணி அதிகம் இடம்பெறுகிறது. பிரியாணிக்கு என்றே குறிப்பிட்ட சில கடைகளும் உள்ளன. அதில் பிரியாணி சாப்பிட மக்கள் கூட்டமும் அலைமோதும். இவைகளால் இந்தியாவின் பிரபல உணவாக பிரியாணி உள்ளது. இந்த பிரியாணியின் சுவையை அதிகரிப்பதே அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான்.
நீங்கள் பிரியாணி பிரியர்கள் என்றால் அடிக்கடி பிரியாணி செய்வீர்கள் என்றால், இந்த ஸ்பெஷல் பிரியாணி மசாலாவை செய்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது பிரியாணிகள் மற்றும் கிரேவிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பிரியாணி மசாலா அசைவம் மற்றும் சைவம் என எந்த பிரியாணிக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த மசாலாக்களுக்கு தேர்ந்தெடுக்கும் பொருட்களை நல்ல தரமானதாக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் பிரியாணி மசாலா நன்றாக இருக்கும். பிரியாணியின் சுவையும் நன்றாக இருக்கும்.
ஸ்பெஷல் பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்
பிரியாணி இலை – 10