Green Peas Benefits: சின்ன சைஸ்..பல நன்மைகள்..! கண், இதயம் ஆரோக்கியம் முதல் பச்சை பட்டாணியில் ஒளிந்திருக்கும் சத்துகள்-why are peas good for health 7 benefits you should know - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Green Peas Benefits: சின்ன சைஸ்..பல நன்மைகள்..! கண், இதயம் ஆரோக்கியம் முதல் பச்சை பட்டாணியில் ஒளிந்திருக்கும் சத்துகள்

Green Peas Benefits: சின்ன சைஸ்..பல நன்மைகள்..! கண், இதயம் ஆரோக்கியம் முதல் பச்சை பட்டாணியில் ஒளிந்திருக்கும் சத்துகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 30, 2024 03:02 PM IST

Peas Benefits: சின்ன சைஸ், பல நன்மைகள் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய உணவாக பட்டாணி உள்ளது. கண், இதயம் ஆரோக்கியம் முதல் ரத்த சர்க்கரை கட்டுப்பாடு வரை பட்டாணியில் இருக்கும் ஆரோக்கிய சத்துக்களை எவை என்பதை பார்க்கலாம்.

Green Peas Benefits: கண், இதயம் ஆரோக்கியம் முதல் பச்சை பட்டாணியில் ஒளிந்திருக்கும் சத்துகள்
Green Peas Benefits: கண், இதயம் ஆரோக்கியம் முதல் பச்சை பட்டாணியில் ஒளிந்திருக்கும் சத்துகள்

பட்டாணியில் இருக்கும் சத்துக்கள்

ஊட்டச்சத்துகளின் சிறந்த ஆதாரமாக பட்டாணி இருந்து வருகிறது. 100 கிராம் பட்டாணியில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

புரதம் - 5.4 கிராம்

நார்ச்சத்து - 5.7 கிராம்

கால்சியம் - 25 மி.கி

இரும்புச்சத்து - 1.47 மி.கி

மெக்னீசியம் - 33 மி.கி

பொட்டாசியம் - 244 மி.கி

வைட்டமின் சி - 40 மி.கி

வைட்டமின் ஏ - 38 மைக்ரோகிராம்

வைட்டமின் ஈ - 0.13 மி.கி

வைட்டமின் கே - 24.8 மைக்ரோகிராம்

உங்கள் உணவு டயட்டில் பட்டாணி சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது

பட்டாணி உணவு நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக உள்ளது. இது செரிமானத்துக்கு நன்கு உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்க உதவுவதுடன், குடல் ஆரோக்கியத்தை பேனி காக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து உள்ளடக்கம் உடல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். ரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைக் குறைக்கும்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது

பட்டாணியில் பாலிஃபீனால்கள் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் செயல்பாட்டை கொண்டுள்ளது. பட்டாணியில் வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்ததை குறைக்கிறது. புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையது வீக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்கிறது

பட்டாணியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் கலவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதன் மூலம் இதய நோய் அபாயம் குறைகிறது.

எடை நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது

100 கிராம் அளவு பச்சை பட்டாணியில் 81 கலோரிகள் உள்ளன. பட்டாணியில் கலோரிகள் குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், அவை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது

கண் ஆரோக்கியத்துக்கு நல்லது

100 கிராம் பட்டாணியில் 2480 மைக்ரோகிராம் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் உள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் நீல ஒளி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. இது வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைக்கிறது.

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு

பட்டாணியில் நிறைந்திருக்கும் புரதம் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. அத்துடன் ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது. அந்த வகையில் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கான சிறந்த உணவாக உள்ளது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பட்டாணியில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகின்றன. அதே நேரத்தில் இதில் இருக்கும் வைட்டமின் ஏ உள்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.