தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கார்த்திகை மாத ஸ்பெஷல் அப்பம்! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! பக்காவான ரெசிபி!

கார்த்திகை மாத ஸ்பெஷல் அப்பம்! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! பக்காவான ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Nov 25, 2024, 05:27 PM IST

google News
கார்த்திகை மாதம் என்றாலே முருகன் மற்றும் ஐயியப்பனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் இந்த இரு தெய்வங்களுக்கும் மாலை அணிவித்து விரதம் இருந்து வழிபடுவார்கள். மேலும் இந்த கார்த்திகை மாதத்தில் வித விதமான உணவு வகைகளும் செய்யபடுகின்றன. (Kamala's Corner)
கார்த்திகை மாதம் என்றாலே முருகன் மற்றும் ஐயியப்பனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் இந்த இரு தெய்வங்களுக்கும் மாலை அணிவித்து விரதம் இருந்து வழிபடுவார்கள். மேலும் இந்த கார்த்திகை மாதத்தில் வித விதமான உணவு வகைகளும் செய்யபடுகின்றன.

கார்த்திகை மாதம் என்றாலே முருகன் மற்றும் ஐயியப்பனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் இந்த இரு தெய்வங்களுக்கும் மாலை அணிவித்து விரதம் இருந்து வழிபடுவார்கள். மேலும் இந்த கார்த்திகை மாதத்தில் வித விதமான உணவு வகைகளும் செய்யபடுகின்றன.

கார்த்திகை மாதம் என்றாலே முருகன் மற்றும் ஐயியப்பனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் இந்த இரு தெய்வங்களுக்கும் மாலை அணிவித்து விரதம் இருந்து வழிபடுவார்கள். மேலும் இந்த கார்த்திகை மாதத்தில் வித விதமான உணவு வகைகளும் செய்யபடுகின்றன. கார்த்திகையில் கடைசி நாட்களில் பெரிய கார்த்திகை கொண்டாடப்படும். இந்த விழாவில் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் முக்கியமான உணவாக கார்த்திகை அப்பம் இருந்து வருகிறது. கார்த்திகை அப்பம் செய்யும் எளிமையான முறையை இங்கு தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

1 கப் கோதுமை மாவு 

2 டீஸ்பூன் அரிசி மாவு

½ கப் வெல்லம்

1 டீஸ்பூன் தேங்காய் துருவல் 

கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்

வாழைப்பழம் 

 வறுக்கத் தேவையான எண்ணெய்

1 டீஸ்பூன் நெய்

செய்முறை

முதலில் ஒரு பாதிரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். வெல்லம் நன்கு கரைந்து கொதித்த பின்னர் இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெல்லம் கரையும் வரை மட்டும் காய்ச்ச வேண்டும்.  வெல்லம் சிரப்பை 3-4 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.  பின்னர் வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு  நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மாவு கலவையில் காய்ச்சி எடுத்த வெல்லப்பாகு மற்றும் அரைத்து வைத்த வாழைப்பழத்தைச் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு கலக்கி கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். 

மேலும் இதனுடன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு இட்லி மாவை விட சற்று கட்டியாகவும், தோசை மாவை விட சற்று இலகுவாகவும் இருக்க வேண்டும். இப்பொழுது அப்பாத்தை வறுக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ஒரு சிறிய அளவு ஆழமான கரண்டியை எடுத்து அதில் மாவை எடுக்கவும். இதை கவனமாக எண்ணெயில் ஊற்றவும். எப்போதும் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் ஊற்றவும். ஒன்றுக்கு மேல் ஊற்ற வேண்டாம். ஏனெனில் அது ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டு வரும். எண்ணெயில் போட்டவுடன், அப்பம் மெல்ல எழும்பி, பஞ்சு போலவும் இருக்கும். மறுபுறம் புரட்டவும். இருபுறமும் வெந்ததும் .வெளியே எடுத்து கிச்சன் டவலால் இறக்கவும். ஆப்பம் சூடாக இருக்கும் போதும், சில மணி நேரம் கழித்து சாப்பிடும் போதும் சுவையாக இருக்கும். அடுத்த நாள் இன்னும் சுவையாக இருக்கும்.

இதனை ஒரு சில வாரங்கள் வரை வைத்து சாப்பிடலாம். மேலும் இது கெட்டுப் போகமால் சுவையாக இருக்கும். மேலும் எளிமையாக வெறும் கோதுமை மாவை வைத்தே செய்து முடிக்கலாம். நீங்களும் இதனை உங்களது வீடுகளில் கார்த்திகை நாள் அன்று செய்து பார்த்து மகிழுங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.  

டாபிக்ஸ்

அடுத்த செய்தி