பஞ்சு போன்ற இட்லி, மொறு மொறு தோசைக்கு இந்த ஒரு சீக்ரெட் இன்கிரிடியன்ட் இருந்தால் போதும்!
இந்த ஒரு சீக்ரெட் இன்கிரிடியன்ட் சேர்த்து பஞ்சு போன்ற இட்லி செய்யுங்கள்.
இட்லி மாவு அரைக்கும் பக்குவம் தெரிந்துகொள்ளும் முன்னர், இட்லி குறித்த சிறப்பு தகவல்களை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது.
கருப்பு உளுந்தை மோரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.
நீங்கள் இந்த அளவு அரிசி, உளுந்து மற்றும் மற்றப்பொருட்களை எடுத்து, தேவையான அளவு நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். அதை நீங்கள் மிக்ஸி அல்லது கிரைண்டர் என எதில் வேண்டுமானாலும் அரைத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 4 கப்
முழு உருட்டு உளுந்து – ஒரு கப்
(மிக்ஸியில் அரைக்கப்போகிறீர்கள் என்றால், ஒன்றரை கப், கிரைண்டரில் அரைக்கப்போகிறீர்கள் என்றால், ஒரு கப்)
மாவு ஜவ்வரிசி – அரை கப்
அவுல் – அரை கப்
செய்முறை
இட்லி, அரிசி, உளுந்து, ஜவ்வரிசி, அவல் அனைத்தையும் தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் தேவைப்பட்டால் கொஞ்சம் வெந்தயம் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு ஸ்பூன் அளவுக்கு உளுந்துடன் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
காலையில் மாவு தயார் செய்தால், இரவே அனைத்தையும் ஊறவைத்துவிடவேண்டும். மாலையில் அரைக்கப்போகிறீர்கள் என்றால், காலையில் ஊறவைத்துவிடவேண்டும். உளுந்தை தாமதமாக கூட ஊறவைத்துக்கொள்ளலாம்.
கிரைண்டர் அல்லது மிக்ஸி என எதில் அரைத்தாலும் உளுந்தை நன்றாக பொங்கி வரும் அளவுக்கு அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். உளுந்தை வழித்துவிட்டு, ஜவ்வரியை சேர்த்து அரைத்து எடுக்கவேண்டும்.
அடுத்து அவலை சேர்தது அரைத்து எடுத்துவிட்டு, அரிசியை ரவை பதத்தில் அரைக்கக்கூடாது. அதையும் நல்ல மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து கல் உப்பு சேர்த்து கடைசியான இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து புளிக்க வைத்து (ஓரிரவு அல்லது 8 மணிநேரம்) இட்லி செய்தால் பஞ்சு போன்ற இட்லி வரும். மொறு மொறு தோசையும் செய்து கொள்ளலாம்.
இந்த விளக்கெண்ணெய்தான் இதில் உள்ள சீக்ரெட் இன்கிரியன்ட்டே, சிலர் ஆமணக்கு விதையை ஊறவைத்து மாவுடன் சேர்த்து அரைப்பார்கள். ஆனால் அதற்கு நீங்கள் அந்த விதையை தேடி அலையவேண்டும். ஆனால் விளக்கெண்ணெய் எளிதாகக் கிடைத்துவிடும். எனவே சூப்பர் சுவையான இட்லிகளை வார்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்