தித்திக்கும் கோதுமை ரவா கேசரி! உடனே செய்து பாருங்கள்! சூப்பர் ரெசிபி இதோ!
கோதுமை ரவையை பயன்படுத்தி சுவையான கேசரியை செய்யலாம். மேலும் இது மற்ற கேசரியை விட மிகவும் சுவையாக இருக்கும். இதனை எளிமையாக நாம் வீட்டிலயேயே செய்யும் முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
விசேஷ நாட்களிலும், பிறந்த நாளிலும் நாம் வீட்டில் செய்யும் முக்கிய இனிப்பு உணவாக செய்யும் உணவு தான் கேசரி. இதனை நாம் ரவை கொண்டு செய்வோம். ஆனால் கோதுமை மாவை வைத்தும் கேசரி செய்வதுண்டு. சுவையான உணவாக இருக்கும் இதை கல்யாண வீடுகளிலும் போடுவார்கள். மேலும் குழந்தைகளும் கேசரி என்றால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். கோதுமை ரவையை பயன்படுத்தி சுவையான கேசரியை செய்யலாம். மேலும் இது மற்ற கேசரியை விட மிகவும் சுவையாக இருக்கும். இதனை எளிமையாக நாம் வீட்டிலயேயே செய்யும் முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கப் கோதுமை ரவை
1 கப் பொடித்த வெல்லம்
4 கப் தண்ணீர்
50 கிராம் முந்திரி பருப்பு
50 கிராம் பாதாம் பருப்பு
50 கிராம் பிஸ்தா பருப்பு
50 கிராம் உலர் திராட்சை
1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
100 கிராம் நெய்
செய்முறை
முதலில் குக்கரில் 4 டீஸபூன் நெய் சேர்த்து கோதுமை ரவையை வறுக்க வேண்டும். பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கர் விசில் அடங்கியதும் வெந்த கோதுமை ரவையை எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் சூடானதும் அதில் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுக்க வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடக்கவும். நெய் சூடான பின்பு வேக வைத்து எடுத்து கோதுமை ரவையை சேர்த்து அதில் வெல்ல பாகை வடிகட்டி ஒன்றாக கலக்கவும். மேலும் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். இப்பொழுது வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இதனை நன்கு கிளறி விட வேண்டும். கட்டியாகமால் நன்கு கிளறி அடுப்பை அணைத்து எடுத்து விட வேண்டும். இப்பொழுது கோதுமை ரவை கேசரி தயார். இதனை வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இனிப்பு உணவுகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு உணவாக இருந்து வருகிறது. அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவே இனிப்பு உணவுகள் மாறிவிட்டன. இந்த நிலையில் வீட்டில் நடக்கும் விசேஷ நிகழ்வுகளுக்கு இந்த கோதுமை ரவை கேசரி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதிலும் இதனை எளிமையாக செய்தும் விடலாம். நீங்களும் இதனை உங்கள் வீடுகளில் ட்ரை செய்து பார்த்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்