பார்த்தாலே பசி எடுக்கும் பன்னீர் நெய் பிரட்டல்!சப்பாத்தி முதல் சாதம் வரை குட் சாய்ஸ்!
Nov 13, 2024, 04:34 PM IST
பன்னீர் வைத்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் ருசியாகஇருப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல புரத சத்துக்களையும் வழங்குகிறது. தற்போது நாம் பன்னீர் நெய் பிரட்டல் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
பாலில் இருந்து எடுக்கப்படும் உணவு தா பன்னீர். இது அசைவம் சாப்பிடாதவர்களுக்கு, அதே சுவையை கொண்டு வருவதற்கு சரியான தேர்வு ஆகும். மேலும் இந்த பன்னீரை வைத்து வித விதமான உணவுகளை தயார் செய்யலாம். பன்னீர் வைத்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் ருசியாகஇருப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல புரத சத்துக்களையும் வழங்குகிறது. தற்போது நாம் பன்னீர் நெய் பிரட்டல் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
400 கிராம் பன்னீர்
1 பெரிய வெங்காயம்
5 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
5 வற மிளகாய்
3 கிராம்பு
எலும்பிச்சை அளவுள்ள புளி
1 கப் தயிர்
1 டேபிள்ஸ்பூன் மல்லி விதை
1 டேபிள்ஸ்பூன் சீரகம்
1 டேபிள்ஸ்பூன் சோம்பு
1 டேபிள்ஸ்பூன் மிளகு
1 டேபிள்ஸ்பூன் வெந்தயம்
தேவையான அளவு நெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலில் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வற மிளகாயை போட்டு அதை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும். பின்பு அதே கடாயில் மல்லி விதைகள், சீரகம், சோம்பு, மிளகு, வெந்தயம், மற்றும் கிராம்பை போட்டு அதை வறுக்க வேண்டும். நன்கு வறுபட்டதும் அதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நறுக்கிய பூண்டு, இஞ்சி, மற்றும் புளியை ஊற வைத்து எடுத்த தண்ணீர் ஆகியவற்றை ஊற்றி அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் நறுக்கிய பன்னீரை போட்டு இரு புறமும் பொன்னிறமானதும் அதை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை வறுக்க பயன்படுத்திய நெய்யையே அதில் ஊற்றவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் தயிரை ஊற்றி நன்கு கலந்து விட்டு அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி நெய் தனியாக பிரிந்து வரும் வரை அதை கிண்டி கொண்டே இருக்கவும். நெய் தனியாக பிரிந்து வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வதக்கவும். பிறகு அதில் வறுத்தெடுத்த பன்னீரை போட்டு பன்னீர் நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும். பிறகு அதில் சிறிதளவு கறிவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி அதை பரோட்டாவுடனோ அல்லது நான்வுடனோ அதை சுட சுட பரிமாறவும். இதனை சாதத்துடனும், சப்பாத்தி மற்றும் தோசை என அணைத்துடனும் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்