தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கம கமக்கும் பள்ளிப்பாளையம் சிக்கன் கறி செய்வது எப்படி? இதோ ஈசி ரெசிபி!

கம கமக்கும் பள்ளிப்பாளையம் சிக்கன் கறி செய்வது எப்படி? இதோ ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Nov 12, 2024, 09:03 PM IST

google News
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிரத்யேக சமையல் முறை இருந்து வருகிறது. அந்த ஊர்களின் பெருமை மிக்க விஷயங்களில் ஒன்றாகவும் இந்த சமையல் முறை பார்க்கப்படுகிறது. (cookpad)
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிரத்யேக சமையல் முறை இருந்து வருகிறது. அந்த ஊர்களின் பெருமை மிக்க விஷயங்களில் ஒன்றாகவும் இந்த சமையல் முறை பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிரத்யேக சமையல் முறை இருந்து வருகிறது. அந்த ஊர்களின் பெருமை மிக்க விஷயங்களில் ஒன்றாகவும் இந்த சமையல் முறை பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிரத்யேக சமையல் முறை இருந்து வருகிறது. அந்த ஊர்களின் பெருமை மிக்க விஷயங்களில் ஒன்றாகவும் இந்த சமையல் முறை பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் கொங்கு மாவட்டங்களின் சமையல் முறை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஈரோடு, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களின் தனி சமையல் முறை அனைவரையும் விரும்ப வைக்கும். பள்ளிப்பாளையம் சிக்கன் கறி மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு குழம்பு வகையாகும். இது கெட்டியாக கிரேவி போல இருக்கும். இதனை வைத்து சாதம், சப்பாத்தி, இட்லி ,மற்றும் தோசை ஆகிய அனைத்து உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதனை எளிமையாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம். இதற்கென தனியாக எதுவும் தேவையில்லை. இதன் எளிய செயல்முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள். 

தேவையான பொருட்கள்:

அரை  கிலோ சிக்கன் 

தேவையான அளவு உப்பு

அரை கப் தண்ணீர்

சிறிதளவு கொத்தமல்லி இலைகள்

4-5 டீஸ்பூன் எண்ணெய்

அரை  டீஸ்பூன் கடுகு விதைகள்

200-250 கிராம் சின்ன வெங்காயம்

ஒரு பெரிய துண்டு இஞ்சி

8 பல் பூண்டு 

12-15 வற மிளகாய்

சிறிதளவு கறிவேப்பிலை

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 5 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் சிறிதளவு கடுகு சேர்த்து பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பாதம் வருமாறு வதங்கி வரும் போது சிறிதளவு இஞ்சி மற்றும் 8 பல் பூண்டை இடித்து சேர்க்கவும்.  இதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் இதில் 10 முதல் 12 பச்சை மிழகாய்களை கீறி விதையை எடுத்து போட வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக வதக்கி விட வேண்டும். இவை நன்றாக வதங்கிய பின்னர் இதில் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும். 

இப்பொழுது இதில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னர் சேர்க்கவும். எலும்பு உள்ள சிக்கனை சேர்க்கும் போது கூடுதல் சுவை கிடைக்கும். மேலும் இதனை அப்படியே கலந்து விட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும். ஒரளவிற்கு வெந்த பின்பு இதில் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்க்க வேண்டும். இதனை நன்கு கிளறி விட வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடியை போட்டு 10 நிமிடங்கள் வேக விட வேண்டும். பின்னர் மூடியை எடுத்து மீண்டும் 10 நிமிபடங்கள் வேக விட வேண்டும். இப்போது சுவையான பள்ளிப்பாளையம் சிக்கன் ரெடி. கொங்கு பகுதியான ஈரோட்டில் பல பெருமைகள் இருக்கின்றன. அதில் ஒன்றாக இந்த பள்ளிப்பாளையம் சிக்கன் இருநதிகூ வருகிறது. நீங்களும் இதனை உங்கள் வீடுகளில் செய்து பார்த்து மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள்.    

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி