முட்டை மஞ்சள் கரு, அவகோடா பழம் மற்றும் பல..வீட்டில் இருந்தபடியே தலைமுடியை பளபளப்பாக்க உதவும் எளிய டிப்ஸ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முட்டை மஞ்சள் கரு, அவகோடா பழம் மற்றும் பல..வீட்டில் இருந்தபடியே தலைமுடியை பளபளப்பாக்க உதவும் எளிய டிப்ஸ்

முட்டை மஞ்சள் கரு, அவகோடா பழம் மற்றும் பல..வீட்டில் இருந்தபடியே தலைமுடியை பளபளப்பாக்க உதவும் எளிய டிப்ஸ்

Nov 10, 2024 07:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 10, 2024 07:40 PM , IST

  • Hair Care Tips: கூந்தல் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். வீட்டிலேயே சில குறிப்புகள் பின்பற்றுவதன் மூலம் தலைமுடி பொலிவை அதிகரிக்கலாம்

தலைமுடி உதிர்வு பிரச்னை ஆண், பெண் என இருவரும் சந்திக்கும் பிரச்னையாகவே இருந்து வருகிறது. முடி உயிரற்றதாக மாறி உதிர்வு அடைகிறது. தலைமுடி பளபளப்பை பெற பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. வீட்டிலேயே சில டிப்ஸ்களைப் பின்பற்றுவதன் மூலம் முடியின் பளபளப்பை அதிகரிக்கலாம்

(1 / 7)

தலைமுடி உதிர்வு பிரச்னை ஆண், பெண் என இருவரும் சந்திக்கும் பிரச்னையாகவே இருந்து வருகிறது. முடி உயிரற்றதாக மாறி உதிர்வு அடைகிறது. தலைமுடி பளபளப்பை பெற பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. வீட்டிலேயே சில டிப்ஸ்களைப் பின்பற்றுவதன் மூலம் முடியின் பளபளப்பை அதிகரிக்கலாம்(pixabay)

முட்டையின் மஞ்சள் கருவில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை கூந்தலுக்கு நன்மை தருகிறது. மஞ்சள் கருவை தலைமுடியில் தடவி 30 நிமிடம் உலர விட்ட பின்னர் கழுவவும். இது தலைமுடியை பட்டுப் போலவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது

(2 / 7)

முட்டையின் மஞ்சள் கருவில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை கூந்தலுக்கு நன்மை தருகிறது. மஞ்சள் கருவை தலைமுடியில் தடவி 30 நிமிடம் உலர விட்ட பின்னர் கழுவவும். இது தலைமுடியை பட்டுப் போலவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது(pixabay)

கற்றாழை ஜெல் முடிக்கு மிகவும் நல்லது. கற்றாழை செடி கிடைத்தால் அதன் இலைகளை சேகரித்து ஜெல்லை பிரித்தெடுக்கலாம். மற்றபடி சந்தையிலும் கிடைக்கும் கற்றாழை ஜெல்லை முடிக்கு தடவி 30 நிமிடம் உலர விட்டு கழுவவும். இது முடியின் பொலிவை அதிகரிக்கும்

(3 / 7)

கற்றாழை ஜெல் முடிக்கு மிகவும் நல்லது. கற்றாழை செடி கிடைத்தால் அதன் இலைகளை சேகரித்து ஜெல்லை பிரித்தெடுக்கலாம். மற்றபடி சந்தையிலும் கிடைக்கும் கற்றாழை ஜெல்லை முடிக்கு தடவி 30 நிமிடம் உலர விட்டு கழுவவும். இது முடியின் பொலிவை அதிகரிக்கும்(pixabay)

தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யை சிறிது சூடாக்கி உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். அதன் பிறகு உங்கள் தலையை ஷாம்பு கொண்டு கழுவவும். வாரத்துக்கு மூன்று முறையாவது, தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை செய்வதன் மூலம் முடி வலுபெறுவதுடன், பொலிவும் அடையும்

(4 / 7)

தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யை சிறிது சூடாக்கி உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். அதன் பிறகு உங்கள் தலையை ஷாம்பு கொண்டு கழுவவும். வாரத்துக்கு மூன்று முறையாவது, தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை செய்வதன் மூலம் முடி வலுபெறுவதுடன், பொலிவும் அடையும்(pixabay)

அவகோடா பழத்தை இரண்டாக நறுக்கி பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் தேனுடன் கலக்கி, அதை உங்கள் தலைமுடியில் தடவி அரை மணி நேரம் உலர விட்டு கழுவ வேண்டும். அவகோடாவில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி முடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றும்

(5 / 7)

அவகோடா பழத்தை இரண்டாக நறுக்கி பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் தேனுடன் கலக்கி, அதை உங்கள் தலைமுடியில் தடவி அரை மணி நேரம் உலர விட்டு கழுவ வேண்டும். அவகோடாவில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி முடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றும்(pixabay)

ஆலிவ் எண்ணெய்யை தினமும் தலைமுடிக்கு தடவ வேண்டும். இது மாசு மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து முடியை பாதுகாக்கிறது. அத்துடன் தலைமுடியை பிரகாசிக்க செய்கிறது. ஆலிவ் எண்ணெயை சிறிது சூடாக்கிய பின் தலைமுடியில் தடவலாம்

(6 / 7)

ஆலிவ் எண்ணெய்யை தினமும் தலைமுடிக்கு தடவ வேண்டும். இது மாசு மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து முடியை பாதுகாக்கிறது. அத்துடன் தலைமுடியை பிரகாசிக்க செய்கிறது. ஆலிவ் எண்ணெயை சிறிது சூடாக்கிய பின் தலைமுடியில் தடவலாம்(pixabay)

ஷாம்பு உபயோகித்த பிறகு கண்டிஷனர் பயன்படுத்துவதை நினைவில் கொள்வது அவசியம். மேலும், குளித்த பிறகு உங்கள் தலைமுடியை தீவிரமாக துடைத்து, உலர்த்த வேண்டாம். மாறாக மென்மையான துண்டு கொண்டு மெதுவாக துடைக்கவும்

(7 / 7)

ஷாம்பு உபயோகித்த பிறகு கண்டிஷனர் பயன்படுத்துவதை நினைவில் கொள்வது அவசியம். மேலும், குளித்த பிறகு உங்கள் தலைமுடியை தீவிரமாக துடைத்து, உலர்த்த வேண்டாம். மாறாக மென்மையான துண்டு கொண்டு மெதுவாக துடைக்கவும்(pixabay)

மற்ற கேலரிக்கள்