இனி இட்லி செய்ய அரிசி உளுந்து தேவையில்லை! ஜவ்வரிசியே போதும்! இதோ ஈஸியான ரெசிபி!
Nov 19, 2024, 08:13 PM IST
இட்லி செய்ய அரிசி மற்றும் உளுந்து தேவைப்படும். ஆனால் வெறும் ஜவ்வரிசியை வைத்து இட்லி செய்ய முடியும். இதனை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள் .
தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு காலை உணவு என்றாலே இட்லி தான். காலை நேரத்தில் இட்லியை சுவையான சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையான உணவாக இருக்கும். தற்போது பல வகையான இட்லி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த இட்லி செய்ய அரிசி மற்றும் உளுந்து தேவைப்படும். ஆனால் வெறும் ஜவ்வரிசியை வைத்து இட்லி செய்ய முடியும். இதனை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள் .
தேவையான பொருட்கள்
அரை கப் நைலான் ஜவ்வரிசி
அரை கப் ரவை
ஒரு கப் தயிர்
1 பெரிய வெங்காயம்
தேவவையான அளவு எண்ணெய்
1 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் சீரகம்
12 முந்திரி பருப்பு
அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
சிறிதளவு இஞ்சி
2 பச்சை மிளகாய்
1 தேங்காய்
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் ஜவ்வரிசியை ஊற வைத்து விட வேண்டும். இதனை குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இபொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். மேலும் இதில் பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பைச் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், துண்டுகளாக நறுக்கிய தேங்காய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விடவும். இதில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு சில நிமிடங்கள் வதக்கி விட வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் ரவை சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்
மிதமான தீயில் அடுப்பை வைத்து, ரவையை நன்றாக வறுக்கவும். வறுத்த ரவையை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும். ஊறவைத்த ஜவ்வரிசியை இந்த கலவையில் சேர்க்கவும். ஒரு கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இப்போது இதனுடன் ஒரு கப் தயிர் சேர்க்கவும். அனைத்தையும் கலக்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும். ஜவ்வரிசிஇட்லி மாவு தயார்.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி ஜவ்வரிசி இட்லி மாவை மெதுவாக தட்டுகளில் ஊற்றவும். இட்லி தட்டுகளை ஸ்டீமரில் வைத்து மூடியால் மூடவும். அதை 20 நிமிடங்கள் சமைக்ககவும். சூப்பர் சாஃப்ட் ஜவ்வரிசிஇட்லியை தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாறவும். இதனை எளிமையாக செய்ய முடிவதால் நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம். அரிசி உளுந்து இல்லாத சமயங்களில் இது சிறந்த தேர்வாக இருக்கும். தினசரி சாப்பிடும் வழக்கமான இட்லியை காட்டிலும் இது கூடுதல் சுவையுடன் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இது போன்று வித்தியாசமான உணவுகளை விரும்பி சாப்பிடும் போது சாப்பிடும் இட்லியின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஜவ்வரிசி இட்லி மிகவும் சாஃப்ட் ஆகவும் இருக்கும்.
டாபிக்ஸ்