கம கமக்கும் கறிவேப்பிலை சாதம் செய்யலாமா? இது மட்டுமே போதும்! ஈசி ரெசிபி இதோ!
கறிவேப்பிலை போட்டு செய்யக்கூடிய முக்கிய உணவு தான் கறிவேப்பிலை சாதம். இது அனைவரும் விரும்பும் சுவையோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் கறிவேப்பிலையை விரும்பி சாப்பிடவும் வைக்கும்.
உடல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவும் கறிவேப்பிலையை தினம் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஏற்கனவே நமது அனைத்து விதமான உணவுகளிலும் கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். இதனை யாரும் முழுதாக சாப்பிடுவதில்லை. ஏனென்றால் கரிவேப்பிலை சுவை அவ்வளவு நன்றாக இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும் பல ஆரோக்கிய பலன்களை அளிக்கும் கறிவேப்பிலையை குழந்தைகளது உணவில் சேர்த்து சாப்பிட வைக்க வேண்டியதும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதற்காகவே கறிவேப்பிலை போட்டு செய்யக்கூடிய முக்கிய உணவு தான் கறிவேப்பிலை சாதம். இது அனைவரும் விரும்பும் சுவையோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் கறிவேப்பிலையை விரும்பி சாப்பிடவும் வைக்கும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை பொடி செய்ய
3 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
3 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் மிளகு
கால் டீஸ்பூன் வெந்தயம்
1 டேபிள்ஸ்பூன் சீரகம்
10 வற மிளகாய்
1 டேபிள்ஸ்பூன் எள்
சிறிதளவு புளி
2 கப் கறிவேப்பிலை
கால் டீஸ்பூன் பெருங்காய தூள்
தேவையான அளவு கல் உப்பு
கறிவேப்பிலை சாதம் செய்ய
3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் கடலை பருப்பு
1 டீஸ்பூன் கடுகு
வற மிளகாய்
கறிவேப்பிலை
1 கப் வறுத்த நிலக்கடலை
வேக வைத்த சாதம்
2 டேபிள்ஸ்பூன் அரைத்த கறிவேப்பிலை பொடி
2 டேபிள்ஸ்பூன் நெய்
செய்முறை
முதலில் கறிவேப்பிலை பொடியை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். அதன் பிறகு அதில் வற மிளகாய், எள் மற்றும் புளி சேர்த்து வறுக்க வேண்டும். மிளகாய் நன்கு வறுபட்ட பின் கறிவேப்பிலையி போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். அதன் பச்சை வாசனை போனதும் அதனுடன் பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலக்குமாறு கிளறி விட வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நடுவில் அரிசியை ஊற வைத்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சாதத்திற்கு ஒரு அகன்ற கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். நல்லெண்ணெய் சூடானதும் அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளிக்கவும். இவை அனைத்தும் நன்கு சிவந்ததும், வடித்த சாதம், பொடித்த கறிவேப்பிலை பொடி சேர்த்துக் கவனமாகக் கலக்கவும்.தேவையான அளவு பொடி சேர்த்த பிறகு, உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும் இறுதியாக சுவைக்காக சிறிது நெய் சேர்த்து கலக்கவும். மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடும் அருமையான சுவையுள்ள கறிவேப்பிலை சாதம் ரெடி. நீங்களும் செய்து பாருங்கள்.